பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

படுத்தியிருப்பர். அரிசி அவலப்பொருள், மங்கலப் பொரு ளன்று என்பதால் வெள்ளரிசியாகக் கொள்ளாமல் அதன் மேல் மஞ்சள் கலந்து மங்கலப் பொருளாக்கினர். மேலும், அரிசிமேல் மஞ்சள் ஏறினுல் நெல் நிறமாகும். எனவே, அவ்வரிசி கெல் போன்றதே என்று அமைதி காட்டவும். வாய்ப்பாயிற்று. இவ்வாறு ஒரு சூழலில் நேர்ந்த மாற்றமே சிறிது சிறிதாக வளர்ந்து அவர்களது வாய்ப்பிற்கு ஏற்ப அரிசியையே பயன்படுத்தும் பழக்கம் ஏறியது. அதே

மரபாகவும் ஆக்கப்பட்டது. இவ்வாறும் நேர்ந்திருக்கலாம்.

எவ்வாருயினும் கருத்தாழம் மிக்க தமிழர் மரபு தடம்

மாறிப் போயிற்று என்பது வருந்தற்குரியது. இதுபோன்று

வருந்தற்குரியதும், தமிழினத்தைத் தாழ்வு படுத்துவதும், தமிழ் மொழியே நீக்கப்பட்டதுமான நிகழ்ச்சிகள் மீண்டும்

புதுப்பித்தற்குரியனவாகும். இது தன்மான உணர்வில் கிற்கவேண்டிய ஒன்ருகின்றது.