பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

புலவர் அரிசில்கிழாரது கை. இம்முல்லை மணம், குறுங் தொகை என்னும் நூலில் இன்றும் மணக்கின்றது.

குமரிப்பெண் இன்பத் தினவில்தான் பேசிளுள். ஒரு திங்கள்வரை மணப்பது அவளது காதற்களிப்பின் கிழ லாட்டங்தான். ஆனாலும், அவளது பேச்சில் அரிசில்கிழார் ஓர் உண்மையை மின்னலிட வைத்துள்ளார்.

அவன் தழுவினன். மலர் மாலே ஏதும் அணியாமல் தாள் தழுவின்ை. அவனது உடல் தழுவியதால் இவளது: உடலில் முல்லை மணம் வீசுகின்றதாம். ஏது அந்த முல்லை மனம்?

-இதனில்தான் அரிய உண்மை ஒன்று துவங்குகின்றது.

அவன் கட்டிளமை கலையாதவன். இயற்கைப் பருவத் தன்மை இயைந்து நிற்கும் விடலே அவன். மணம் ஆகாத பெண் கன்னி எனப்படுவாள். மணம் ஆகாத ஆண் விடலை” எனப்படுவான். ஆம், இந்த விடலேயை இதற்கு முன் காமக் குறும்பு என்னும் வண்டு குதறியதில்லை. முதன் முதலில் இவளேக்கண்டுதான் காதல் மு. கி ழ் த் தது. காம அலைபாயும் உள்ளத்தால் அங்கங்கே உலா வந்தவனல்லன் அவன், தென்றல் போல் கண்ட மலரை எல்லாம் சுவைத்த கோவலன் அல்லன் அவன். தூய - அமைதியான - நெறியில் கின்ற விடல. அதல்ை அவனது. உடலில் இயற்கையாகவே முல்லே மணம் ஊறியது. இயற்கை முல்லே மணம், தூய விடலே என்பதற்கு ஒரு முத்திரைச் சின்னம். - - -

ஆம், விடலைப் பருவத்தை விடாது காக்கும் கட்டிகளஞ்ன் உடல் முல்லே மணம் வீசும் என்பதை மேலே கண்ட பாடல் குறிப்பில் இசைக்கின்றது. -

உடல் முத்திரை இலக்கணத்தைப் பேசும் நூல்களும் இக்கருத்தை ஒப்புகின்றன. -