பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

முள்வேலிகள்

"வேளை கெட்ட வேளையிலே தடுமாறிப் போய்க் குடிச்சிட்டுக் கிடிச்சிட்டு வந்து கதவைத் தட்டினா வீடு தெரியாம உன் வீட்டுக் கதவைக்கூட வந்து தட்டுவாங்க. ஜாக்கிரதை."

பக்கத்து வீட்டு ஆட்கள் பற்றி இப்படியொரு விவரம் தெரியவந்ததும் கண்ணன் அதிர்ந்து போனான். அவர்களை இனி அங்கிருந்து கிளப்புவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்றாலும் அப்படிக் கிளப்ப முயன்று பார்க்க வேண்டுமென்ற வெறுப்பும் விரோதமும் அவனுள் மூண்டன. நெருங்கிப் பழகி அறிந்துகொள்ள நேரும் முன்பே பல காலம் கலந்து பழகி அதன் கசப்பான விளைவுகளால் மூண்டது போன்றதொரு குரோதம் எப்படியோ மூண்டு விட்டது.அல்லது மூட்டப்பட்டு விட்டது.

முதலிலேயே விழுந்துவிட்ட இந்த அபிப்பிராயம் பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவுடனோ அவள் வளர்த்த ஐந்து பெண்ணழகிகளோடோ அவன் பேசவும், பழகவும் செய்யாமலே தடுத்து அவர்களைக் கண்ணை மூடிக் கொண்டு வெறுக்கும்படி செய்துவிட்டது.

கண்ணன் இந்த விவரத்தை முதலில் வேறு யாருக்கும் சொல்ல வேண்டாமென்றுதான் நினைத்தான். நாமாகப் போய் மற்றவர்களிடம், 'எங்க பக்கத்து வீடு இப்படி ...'என்று டமாரம் அடிக்கக் கூடாது என்பதுதான் முதலில் அவன் எண்ணமாயிருந்தது.

அந்த எக்ஸ்டென்ஷனில் முதலில் குடிவந்த பத்துப் பதினைந்து வீடுகளில் இருந்தவர்களை ஒன்று சேர்த்துக்