பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

முள்வேலிகள்

பாருங்க மிஸ்டர் கண்ணன்! ஒருத்தர் நல்லது சொல்றதுக்காகத் தேடிவர்றப்போ மத்தவங்க வெத்தலை பாக்கு வச்சு அழைச்சுத்தான் வரணும்னு அவசியமில்லே. நீங்க அழைக்காமலே நான் தேடிவந்து உங்களுக்கு நாலு நல்லதைச் சொல்லலாம். நீங்க விரும்பாட்டாலும் கூடச் சொல்லலாம். இதிலே நான் மான அவமானம் பார்க்கிறவன் இல்லே'’

‘’அடுத்தவங்களுக்கு நல்லது சொல்றதுக்கோ செய்யறதுக்கோ முதலில் உங்களுக்கு ஒரு யோக்கியதை வேணும் பாகவதர்வாள்!"

‘’மிஸ்டர் கண்ணன்! நீங்க இதைவிடக் கடுமையா என்னை விமர்சிச்சாலும் நான் திரும்பிப் போயிட மாட்டேன். கவலைப்படாதீங்கோ. யோக்யதை, ஒழுக்கம், நன்னடத்தை இதெல்லாம் இன்னோருத்தர் மெச்சறததுக்காகவோ இன்னொருத்தர் திருப்திக்காகவோ கடைப்பிடிக்கிற விஷயங்கள் இல்லே. நம்ம திருப்திக்காக நாமே மனப்பூர்வமாகக் கவனித்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.”

‘’அதான் தெரியுதே! நீங்க எல்லாத்தையும் உங்க திருப்திப்படி தான் செய்துக்கிறீங்க ‘’ என்று கூறிவிட்டு விஷமத்தனமாகச் சிரித்தான் கண்ணன்.

பாகவதர் அதைக் கேட்டு எதுவுமே பாதிக்கப்படவில்லை.

‘’மிஸ்டர் கண்ணன்! உண்மையில் நமக்கிடையே எந்த விரோதமும் இல்லை.நீங்களாகக் கற்பித்துக் கொண்ட கற்பனை விரோதங்களாலே வீணுக்குச் சிரமப்படுகிறீர்கள்! ஒரு மனிதனைப் போதுமான அளவு அழுகச் செய்வதற்கு அவன் மனத்தில் தேங்கும் கற்பனை விரோதங்களும், குரோதங்களுமே போதுமானவை. இதற்கு உங்கள் மகனவியும், குழந்தையும் என்ன செய்வார்கள்? பாவம்! அவர்களை ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்? எங்கள் மேலுள்ள விரோதமனமப்பான்மையால் சுகன்யாவையும், குழந்தை கலாவையும்