பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

முள்வேலிகள்

 ஆனால் இந்த வம்பு இந்தக் குதர்க்க விசாரணை எல்லாம் சிறுபான் மைதான். பணத்திலும் புகழிலும் விரோதங்கள் மெல்ல மெல்லக் கரைந்து வந்தன. -

பாகவதருடைய யோசனையின் பேரிலும், தானாகவும் நிறையத்தான தருமங்கள் செய்ததால் அம்மிணி அம்மாளுக்கு நல்ல பெயர்தான் பெரும்பான்மையாக இருந்தது. ஐயப்பன் நகர் காலணியைத் தன் நன்கொடைகள் மூலம் அம்மிணி யம்மாள் சுவர்க்கபுரி ஆக்கியிருந்தாள். காலனிவாசிகள் அவளைக் கையெடுத்துக் கும்பிடாத குறையாக மதித்தார்கள். அடையாறு, போயஸ் கார்டன் போன்ற ஆடம்பரப் பகுதி களில் பிரமாதமாக அரண்மனை போன்ற புதுப் பங்களாக் களைக் கட்டியபின்பும் அம்மிணி அம்மாள் தங்களோடு தங்கள் காலனியிலேயே வசித்தது காலனிவாசிகளுக்குப் பெருமையா யிருந்தது. வீட்டில் பென்ஸ்,டயோட்டா என்று ஏ.சி. செய்த கார்கள் இரண்டு மூன்று இருந்தும் அம்மிணி அம்மாள் இன்றும் அதிகாலையில் நெற்றியில் சந்தனக் கீற்றும் சிறிது கூட நரைக்காமல் கன்னங்கரெலென்று முதுகில் புரளும் ஈரக் கூந்தலும், கையகலச் சரிகைக் கரையுடன் கூடிய நேரியலு மாக நடந்தே காலனிக் கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்புவதை மக்கள் அதிசயமாகப் பார்த்தார்கள்.

'பகவான்தான் நம்மைப் போல ஜீவாத்மாக்களுக்கு எஜமானன். நம்ம ஆடம்பரத்தையோ, வசதிகளையோ அவனுக்கு முன்காட்டிச் செருக்கு அடையப்பிடாது. உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாக முடியாது. ஆலய தரிசனத்துக்குப் போறப்போ பயபக்தியோடு போகணும். எளிமையாப் போகணும். மனசையே தாமரைப் பூவாக்கி அவனுேட பாதார விந்தங்களிலே சமர்ப்பிச் சுடனும்கிற மாதிரிப் போய் வழிபடனும்’-என்று பாகவதர் அடிக்கடி தம் கதாகாலட்சேபங்களில் செொல்லும் உபதேசத்தை அம்மிணி அம்மாள் அப்படியே கடைப் பிடித்தாள்.