பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

முள் வேலிகள்

 கூட இருக்கும்’-என்று நிருபர் கூறவே, கண்ணனுக்குத் தயக்கம் வந்து விட்டது.

உடனே அதைப் பூசி மெழுகி மறுத்தான். நீங்க எதுக்கும் நாளைக்கு வாங்களேன். நான் கொஞ்சம் யோசனை பண்ணி வைக்கறேன்! இப்பச் சோன்னதெல்லாம் ஆஃப் த ரெக்கார்டாக இருக்கட்டும்! நாளைக்குப் பேசலாம்’-என்றான்,

கண்ணனைப் பார்ப்பதற்கு முன்பே நிருபர் மற்றவர் களையும் பார்த்து முடித்திருந்ததைக் கண்ணனிடம் சொல்ல வில்லை. இதுவரை இருதரப்பாருமே பரஸ்பரம் ஒருவருக் கொருவர் நற்சான்றிதழ் கொடுத்துப் பாராட்டிக் கொண்ட பக்கத்து வீட்டுக்காரர்களேயே சந்தித்துத் தான் அலுத்துச் சலித்துப் போயிருந்ததற்கு மாறாகக் கண் ணனிடம் தன் பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றிக் கொஞ்சம் வித்தியாச மான அபிப்பிராயம் கிடைக்கும் போல் இருக்கவே, நிருபர் அவன் பேட்டியை வாங்குவதில் இன்னொரு முறை அலையக் கூடத் தயாராயிருந்தார். இந்தப் பேட்டி விஷயத்தில் முதலில் பக்கத்து வீட்டாரைப் பற்றி மனத்தில் பட்டதை எல்லாம் பேசிவிட்டாலும் அப்புறம் கண்ணனுக்கே ஒரு சந்தேகம் ஏற்பட்டது. எதற்கும் சினிமா உலகிலும் பத்திரிகை உலகிலும் அறிமுகம் உள்ள நண்பன் உண்மை விளம்பியையும் புலவர் மகிழ்மாறனையும் கலந்து பேசியபின் பேட்டி கொடுப்பது நல்லது என்று இப்போது இரண்டாம் எண்ணமாகக் கண்ணனுக்குத் தோன்றியது. -

அலுவலகம் முடிந்ததும் நேரே வடபழநி போய் உண்மை விளம்பியைக் கூட்டிக்கொண்டு வீடு திரும்பிப் புலவருக்குச் சொல்லியனுப்பினான் கண்ணன். அவன் முன்பே நினைத்தது சரியாயிருந்தது. உண்மை விளம்பிக்குச் சரியான கிரிமினல் மூளை. புலவருக்குச் சரியான பொலிடிகல் பிரெய்ன். - இரண்டையும் கலந்து யோசித்தபோது தற்காலத்துக்குத்தேவையான பக்கா அறிவு கண்ணனுக்குக் கிடைத்தது.