பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

9

'காலனி வெல்ஃபேர் அசோசியேஷன் என்று ஒரு சங்கம், ஆரம்பிக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது. இன்னும் பல வீடுகள் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்படவில்லை.கட்டி முடித்த வீடுகள் சிலவற்றில் அதன் உரிமையாளர்கள் குடியேறவில்லை.அதில் கண்ணனின் மற்றொரு பக்கத்து வீட்டுக்காரரும் ஒருவர். வலது பக்கத்து வீடுதான் அம்மிணி அம்மாளினுடையது என்றால் இடது. பக்கத்து வீடு இன்னும் ஆள் குடியேறாமல் காலியாயிருந்தது. அதிலாவது நல்ல மனிதர் ஒருவர் வந்து குடியேற வேண்டுமே என்ற கவலை அவனுக்கு இருந்தது. தேடிப்பிடித்து விசாரித்ததில் அது ஒரு கதாகாலட்சேபக்காரருக்கு'அலாட்' ஆகியிருந்தது.'ஹித பாஷாப்ரவீண இஞ்சிக்குடி நாகசாமி பாகவதர்'-என்ற பேரும் பிரபலமாகக் கேள்விப்பட்ட பெயராயிருந்தது.

அவர் இன்னும் காலனிக்குள் குடியேறவில்லை என்றாலும் ராமநாதன் தெருவில் அவர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டைத் தேடிப் போய்ப் பேசி அவரையும் காலனி நலம் நாடுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கிய கண்ணன், பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவை மட்டும் கடைசிவரை யில் கண்டு கொள்ளவே இல்லை.

அந்தப் பேட்டைவாசி என்ற முறையில் சங்கத்தில் உறுப்பினராக அந்த அம்மாளுக்கு எல்லா உரிமையும் இருந்தாலும் கண்ணனால் அம்மிணி அம்மாவைச் சேர்க்க முடிய வில்லை.சேர்க்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

கண்ணன் வெறுப்பும் சந்தேகமுமாக ஒரு போலிஸ் காரனின் சி.ஐ.டிக் கண்களோடு அந்த வீட்டிைக்