பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தா. பா.

109



தானேப்பா?'ன்னு கேட்டுக்கிட்டே உள்ளே நுழையப் பார்த்தான். நான், பக்கத்து விடுதான்! அங்கே போய்க் கதவைத் தட்டு. திறப்பாங்க'ன்னு அனுப்பி வச்சேன். இது மாதிரி வெளியிலே சொல்லவே கூச்சப்பட வேண்டிய பல தர்மசங்கடங்கள் பக்கத்து வீடுகளாலே ஏற்படறதாலேதான் அவங்களை நம்மாலே மறக்கமுடியறதில்லே. செக்ஸ் ஸ்டார். ரிகார்ட் டான்ஸ்காரிங்கன்னெல்லாம் பேர் வாங்கிடற நடிகைங்க நம்ம வீட்டுப் பக்கத்திலே குடியிருக் கிறதிலே இன்னொரு ஆபத்து என்னான்னா, நீ செக்ஸ் ஸ்டார் ..வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலேதானே குடியிருக்கே?-ன்னு நாக்கைப் பிடுங்கிட்டுச் சாகிற மாதிரி மத்தவங்க நம்மை விசாரிப்பாங்க, - - - -

இன்னுெரு சமயம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒரு பட்டுப் புடவைக் கடைக்காரர் என்னைத் தேடி வந்தார். சார் இது தானே பாகவதர் வீடு? நிறையப் பட்டுப்புடைவை சரிகை வேஷ்டி எல்லாம் விலைக்கு இருக்குன்னு பாகவதர் வரச் சொன்னருங்க-என்றார். கதாகாலட்சேபத்திலே இராமாயண பட்டாபிஷேகம் போன்ற சமயங்களில் கிடைக்கிற பட்டுப் புடைவை, பட்டு வேஷ்டிகளைச் சேர்த்து வைத்து விலைக்கு விற்கிற பாகவதர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலே நாம் இருக்கோம்னு அப்பத்தான் எனக்குப் புரிஞ்சுது.

நம்ம அக்கம்பக்கத்து வீடுகளிலே இருக்கிறவங்களைவிடத் தள்ளி இருக்கிற நல்லவங்க யாரையாவது அண்டை வீட்டா ராகப் பெற்றிருக்கக் கூடாதான்னு நான் அடிக்கடி ஏக்கம் அடைவதுண்டு'- -

என்று முடிந்திருந்தது கண்ணனின் பேட்டிக் கட்டுரை. வக் கீலிடம் காட்டி இந்தப் பேட்டியைப் படித்துவிட்டுப் பாகவதரோ அம்மிணி அம்மாளோ எந்தச் சட்ட நடவடிக்கை யும் எடுக்க வழியில்லே என்பதை உறுதி செய்து கொண்டு விட்டதாக உண்மை விளம்பியும், புலவரும் உறுதி கூறி விட்டுப் போயிருந்தார்கள். பரவாயில்லை! அவர்கள்வாங்கிச்