பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

முள்வேலிகள்



சாப்பிட்ட பட்டை நன்றாகத்தான் வேலை செய்திருக்கிறது. ரொம்பத் தந்திரமாக அக்கம் பக்கத்து வீட்டார் மட்டமான ஆட்கள் என்பதைப் பேட்டியில் சுட்டிக் காட்டி எழுதிவிட் டார்கள். என்ன இருந்தாலும் உண்மை விளம்பி பெரிய கில்லாடிதான் என்று நினைத்து மனத்துக்குள் பாராட்டிக் கொண்டான் கண்ணன். காலனிக்குப் பெயர் சூட்டும்போது அஸோஸியேஷனில் ஏற்பட்ட தகராறை வைத்துப் பாகவதருக்கும் அம்மினி அம்மாவுக்கும் கற்பில் நம்பிக்கை இல்லை என்பதை நாசூக்காகக் கொண்டு வந்த யோசனே புலவர் மகிழ்மாறனுடையதாக இருக்க வேண்டும் என்று கண்ணனே ஊகித்துக் கொண்டான்.

அவர்கள் கண்ணகி நகர்' என்பதற்குப் பதில் சாஸ்தா நகர் எக்ஸ்டென்ஷன்' எனப் பெயர் வைக்க விரும்பினார்கள் என்பதைச் சொல்லியிருந்தால் அவர்களைப் பற்றி நல்லபிப் ராயம் வந்துவிடும் என்று நயமாக அப்பகுதி உண்மைக்கு இருட்டடிப்புச் செய்து கண்ணகி நகர் என்ற பெயரை அவர்கள் இருவரும் சேர்ந்து எதிர்த்தார்கள்’ என்பதை மட்டும் கூறிய புலவரின் சாமர்த்தியம் கண்ணனுக்கு மிகவும் பிடித் -திருந்தது. பாகவதரும், அம்மிணி அம்மாளும் கொடுத்த யோசனையை ஏற்று அதில் சிறிது மாறுதலுடன் தான் 'ஐயப்பன் நகர்' என்ற பெயரே வைக்கப்பட்டது என்ற உண்மையைக் கூடப் புலவர் தந்திரமாக மறைத்திருந்தார். தன்னை அவமானப்படுத்திய இவர்கள் பெயர் பத்திரிகைளில் நாறட்டும் என்ற ஆத்திரத்தோடு கண்ணன் காத்திருந்தான். -

சொல்லிவிட்டுப் போனபடி பத்திரிகை நிருபர் கண்ணனை மறுபடி தேடி வந்தார். வந்த நிருபருக்குத் தமிழும் மலையாளமும் நன்றாகத் தெரிந்திருந்தது. கண்ணன் தமிழில் படிக்கப் படிக்க அவர் அதை மலையாளத்தில் உடனே மொழி பெயர்த்து. எழுதிக்கொண்டுவிட்டார்.