பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

111



'இதுவரை வந்த இந்த சீரிஸ்லியே இதுதான் டாப்பா இருக்கப் போகுதுங்க. எல்லாருமே இதுவரை எங்க நெய்பர்" இந்திரன் சந்திரன்னுட்டாங்க. அதனாலே ரொட்டீன் ஆகப் போயிடிச்சுங்க. இப்ப முதமுதலா நீங்க ஒருத்தர்தான் உங்க நெய்பர்ஸைப் பற்றி வாழைப்பழத்திலே ஊசி இறக்கிற மாதிரி நைஸாச் சாடியிருக்கீங்க. அதுனாலே நெறைய ரீடர்ஸ் இதைப் பத்திப் பேசப்போறாங்க. பெரிய காண்ட்ர வர்ஸி வரப்போகுது. தமிழ்ப் பேப்பருங்ககூட இதை மொழி பெயர்த்துப் போட்டாலும் போடு வாங்க'-என்று அவனைப் பாராட்டி விட்டுப் போனார் நிருபர். காண்ட்ரவர்ஸி' என்றதும் கொஞ்சம் தயக்கமும் பயமும் ஏற்பட்டாலும் அந்தப் பேட்டி பாகவதரையும் அம்மிணி அம்மாவையும் வாசகர்கள் மத்தியில் சின்னாபின்னப் படுத்தி நாற அடிக்கப் போகிறது என்கிற ஒரு குரூர எதிர்பார்த்தலில் அவன் மனம் மகிழ்ந்தது.

இந்தக் குரூர சந்தோஷத்தில் திளைத்திருந்த அவன் அவர்கள் பேட்டியில் தன்னைப் பற்றி என்ன சொல்லியிருக் கிறார்கள் என்பதை நிருபரிடம் விசாரிக்கவும் இல்லை ஆவலோ பரபரப்போ காட்டவும் இல்லே. நிருபர் அசகாய சூரனாகை இருந்ததனால் கண்ணனைப் புகழ்ந்து தள்ளிய வேகத் தில் வேறெதையும் பற்றித் தன்னிடம் அவன் விசாரிக்கிற ஞாபகமே அவனுக்கு எழாதபடி செய்துவிட்டுப் போயிருந்தான•

அதேசமயம் தன்னைப் பற்றிப் பாகவதரோ, அம்மினி அம்மாளோ குறை சொல்ல எதுவும் இல்லை என்பதையும் அவன் தனக்குத் தானே நினைவு கூர்ந்தான். இனவெறியர். கடவுள் நம்பிக்கை இல்லாத ஆள். முகடு. பழகத் தெரி யாது. காலனி அஸோஸியேஷன் செயலாளராக எதுவுமே 'செயல்படமல் சோம்பேறியாகக் காலம் கழித்துவிட்டார். ஆயிரம்"ரூபாய் பணம் செலவழித்துக் காலனியில் எல்லார் வீட்டிலும் தாறுமாறாகத் தாரில் எழுதத் தூண்டிணார்-என்று இப்படி ஏதாவது குறைகளை அவர்கள் தன்னைப்பற்றி அடுக்க