பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

115



ஆனால் கண்ணனைப் பற்றி அவனது இரு பக்கத்து வீட்டுக்காரர்களும் கூறிய அபிப்ராயங்களும் சேர்ந்தே பிரசுரமாகியிருந்தன. அம்மிணி அம்மாளின் பெண் ஸெக்ஸ் நந்தினி சொல்லியிருந்தாள்: -

பக்கத்து வீட்டில் ஆண்கள் யாரையும் நான் பார்த்துப் பழக நேர்ந்ததே இல்லை. பக்கத்து வீடு என்றாலே சுகன்யா அக்கா நினைவுதான் எனக்கு வரும். அவங்க குழத்தை கலா ரொம்ப ஸ்வீட் கேர்ள், சுகன்யா அக்கா மாதிரிப் பொறுமையே உருவமான ஹவுஸ் வொய்ஃப் மிகவும் அபூர்வமான வங்க என்கிறது என் அபிப்ராயம். அந்த அக்காவோட சிரிச்சமுகத்தை என்னாலே மறக்கவே முடி யாது. அவங்க கணவர் ரொம்ப முன் கோபக்காரராம். ஒரு *ளினிக்’னு அவங்க சொல்றதிலே இருந்து நான் அந்த ஆளேப்பற்றிப் புரிஞ்சுக்க முடிஞ்சது. பாவம்! அக்காவும் அவங்க குழந்தையும் தங்க கணவனுக்குப் பயந்து பயந்து புருஷன் ஆபீஸுக்குப் போயிருக்கறப்ப, வெளியிலே போயிருக்கிற அப்போன்னு பார்த்து எங்க வீட்டுக்கு இரகசியமா வந்து பழகுவாங்க. வீடியோவில படம் பார்ப் பாங்க. நான் என் அக்கா எல்லாரும் நடிச்ச பல படங்களை அவங்க தியேட்டர்ல போய்ப் பார்த்ததே இல்லை. எங்க் வீட்டிலே வீடியோவிலேதான் பார்ப்பாங்க. அவங்க புருஷன் வேலையாள் யாரும் போடாததாலே அக்காவுக்கு வீட்டு வேலை வேறு அதிகம். அத்தினி வேலையையும் பொறுமையாகச் செய்வாங்க. அவங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. ரெண்டு பேருக்கும் பச்சை மிளகு ஊறுகாய்குக் கொள்களப் பிரியம். கேரளாவிலிருந்து எங்களுக்கு வர்றப்பு அம்மா அவங்களுக்கும் மிளகு ஊறுகாய் குடுத்து அனுப்புவாங்க. எனக்கு எத்தனையோ லட்சக்கணக்கான இரசிகர்கள் இருந்தும் இந்தப் பக்கத்து வீட்டுச் சுகன்யா அக்காதான் முதல் ரசிகைங்கிறது என் அபிப்ராயம். அவங்களை ரசிகைங்கிறது கூடத் தப்பு. சிநேகிதி, அக்கா,ன்னுசொல்றதுதான் மிகவும் பொருத்தம்'