பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

119

நடிகை உன்னைத் தன்னோட முதல் ரசிகைன்னு பீத்திக்கிறா. கெளரவமான குடும்பப் பெண்ணான நீ அவளை இப்பிடிச் சொல்ல விட்டிருக்கலாமா? இதுனாலே உம் பேரு என் பேரு, நம்ப குடும்பப் பேரு எல்லாமே சீரழியறதுதான் மிச்சம்.'

  • நான் ஒரு தப்பும் பண்ணலிங்க... அவ பாட்டுக்கு என்னேக் கேட்காமே ஒரு பத்திரிகைக்கு இப்பிடிப் பேட்டி கொடுத்தா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்?' -

பேட்டியில் என்னைப் பத்தியும் என் கணவரைப் பற்றி யும் அந்த நந்தினி சொன்னதெல்லாம்.பொய்னு இங்கிலீஷ்லே நான் சொல்ற மாதிரி அந்தப் பத்திரிகைக்கு ஒரு மறுப்பு உடனே எழுதிப் போடுவியா?" -

  • நீ ங் க எ ன் ன சொல்றீங்களோ அப்பிடியே செய்யறேன். எனக்கு ஒரு பாவமும் தெரியாது.'

கண்ணன் சுகன்யாவை மிரட்டியிருந்தானே ஒழிய அந்தக் கடிதத்தை மலையாளப் பத்திரிகைக்கு எழுதி அனுப்பும்படி மீண்டும் அவளை வற்புறுத்திக் கேட்கவில்லை அவன். நந்தினி விஷயத்தை மட்டும்தான் அவன் சுகன்யா விடம் விசாரித்திருந்தான். தன் பேட்டியும் பாகவதர் பேட்டி யும் அதே பத்திரிகையில் வந்திருப்பதைப் பற்றி அவளிடம் மூச்சே விடவில்லை.

அவன் அலுவலகம் சென்றபின் பாகவதரும், அம்மிணி யம்மாளும் சுகன்யாவிடம் வந்து கண்ணனின் அந்தப் பேட்டியைப் பற்றிக் குறை சொல்லி வருத்தப்பட்டார்கள்.

"உன் புருஷன் இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம் அம்மா! நான் உன் புருஷனைப் பத்தி எதுவுமே சொல்லாமக் கெளரவமா விட்டிருக்கேன். நந்தினி ஏதோ கோபக்காரர் அது இதுன்னு கண்ணனைப் பத்தி வருத்தப்பட்டிருக்கா... ஆனா உன் புருஷன் எங்களைப்பத்தி எழுதியிருக்கிறதை அம்மிணியைப் படிச்சுக் காட்டச் சொல்றேன், கேளு. இது உனக்கே நியாயமா இருந்தாச் சரி.'

-