பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

121


17

தெல்லாம் நடந்து சில மாதங்கள் ஒடிவிட்டன. ஐப்பசி மாதக் கடைசி. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. -

ஒரு நாள் காலையில் பக்கத்து வீட்டு வாசலில் 'எழிலரசி நந்தினி வாழ்க!” என்ற பலமான கோஷங்கள் முழங்கிய தைக் கேட்டு அதில் தனக்குப் பழக்கமான குரல் ஒன்றும் கேட்கவே வியப்போடு வாசலில் வந்து பார்த்தான் கண்ணன்.

எழிலரசி செல்வி நந்தினி இரசிகர் மன்றம்’ என்ற துணி பேனரைப் பிடித்தபடி ஒரு குட்டி ஊர்வலமே பக்கத்து அம்மிணியம்மாள் வீட்டு வாயிற்படியில் நின்று கோஷங்கள் போட்டுக் கொண்டிருந்தது. இரசிகர் மன்ற பேனரை இரு புறமும் தாங்கி நின்ற நபர்களைப் பார்த்தானோ இல்லையோ கண்ணனுக்கு அப்படியே மூர்ச்சை போட்டுவிடும் போலிருந் தது. ஒருபக்கம் புலவர் மகிழ்மாறனும், மறுபக்கம் உண்மை விளம்பியும் இரசிகர் மன்றத்தைத் தூக்கிப் பிடித்தபடி கோஷம் போட்டுக் கொண்டு நின்றார்கள். செல்வி நந்தினிக்கு அணிவிப்பதற்காக ஆளுயர ரோஜாப்பூ மாலை யுடன் புலவரின் மனைவி தாயம்மாளும் ஊர்வலத்தில் நின்று கொண்டிருந்தாள். அதே பழைய தமிழர் பட்டாளத்து இளைஞர்கள், சில பெண்கள், என்று ஒரு நாற்பது ஐம்பது பேர் கோஷங்கள் போட்டு நந்தினியை வாழ்த்தியபடி பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் அட்டகாசமாக நுழைந்து கொண்டிருந்தார்கள். . .’

கண்ணன் தன் வீட்டு முகப்பிலிருந்து தங்களைப் பார்ப் பதைப் புலவரும் உண்மை விளிம்பியும் கண்டுவிட்டனர். உடனே கண்ணன் புலவரைச் சைகை செய்து கூப்பிட்டான்.