பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

128



குடையோடு போனாலும் நனைந்து விடும் என்கிற அளவு காற்றும் மழையுமாகச் சுழற்றிச் சுழற்றி அடித்துக் கொண் டிருந்தது. புலவர் வீடு சில கெஜ தூரத்தில் அடுத்த தெரு வில்தான் இருந்தது. இந்த மழையில் அவர் எங்கேயும் போயிருக்கவும் முடியாது. அன்று ஏதோ பொது விடுமுறை நாள் வேறு. தேடிப் போவதா வேண்டாமா என்ற சில நிமிஷ மனப் போராட்டத்துக்குப் பின் குடையை எடுத்துக் கொண்டு கண்ணன் புலவர் வீட்டுக்குப் புறப்பட்டபோது, :இந்த அடை மழையிலே எங்கே கிளம்பிட்டிங்க? மழை நின்னப்புறம் போகலாமே?' என்றாள் கண்ணனின் மனைவி சுகன்யா, . - * -

இல்லை! பக்கத்துத் தெருவுக்குத்தான். அவசரமா ஒரு வேலைஇருக்கு.பத்து நிமிஷத்திலே போயிட்டு வந்திடறேன்.'

மழை நின்னதும் போங்களேன். அதுக்குள்ளே அப்படி என்ன தலை போகிற காரியம்?' என்று அவள் கூறியதையும் பொருட்படுத்தாமல் கிளம்பினுன் கண்ணன். பலத்த காற்று குடையை மேல் நோக்கி இழுத்தது. அந்த மழையிலும் காற்றிலும் குடை பிய்த்துக் கொண்டு போய் விடாமல் சமாளித்துக்கொண்டு நடப்பதே சிரமமாயிருந்தது. புலவர் வீட்டு வாசலில் புதுப் பெயிண்ட் பளபளக்க ஒரு பிரம்மாண்டமான போர்டு மழையில் குளித்துக் கொண்டு நின்றிருந்தது. -

'எழிலரசி செல்வி நந்தினி இரசிகர் மன்றம்.'

(தலைமை நிலையம்)

கிளைகள் தமிழகம் முழுவதும்.

தலைவர்-புலவர் மகிழ்மாறனர்.

பொதுச் செயலாளர்-உண்மைவிளம்பி. .. போர்டைக் கடந்து உள்ளே போனால் புலவர், உண்மை விளம்பி இருவருமே ஒரே சமயத்தில் அவனை எதிர்கொண்டு