பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

125



பத்தாயிரம் ரொக்கமா நன்கொடை கொடுத்தாங்க. ரிஸ் படத்துக்கெல்லாம் எல்லா ஊர்லயும் எல்லா முதல் காட்சியிலியும் அம்பது டிக்கெட் மன்றத்துக்கு முன்னுரிமையாத் தரச் சொல்லி ஏற்பாடு செய்யறேனாங்க."

ரொம்பப் பெரிய சாதனைதான்."

'உடனே நான் தலைவராயிட்டேன். உங்க நண்பரைச் செயலாளராக்கி இதை செட்அப் பண்ணியாச்சு. இன்னிக் குத்தான் மன்றத் தொடக்க விழா. அவங்க பிறந்த நாள் வேற. அதான் ஊர்வலமா வந்து ரசிகருங்க அவங்களுக்கு மாலை அணிவிக்கிறதுன்னு ஏற்பாடு பண்ணினோம்,'

'ரொம்ப சந்தோஷம். அப்ப நான் வரட்டுமா புலவரே'

'சரி,போயிட்டு வாங்க. இனிமே நம்ம நட்புப் பழையபடி தொடர வழியே இல்லே. ஆனா உள்ளத்தளவிலே நாம இன்னும் சிநேகிதருங்கதான். மறந்துடாதீங்க.'

“உதட்டளவிலே வேண்டாம்கிறீங்க அப்படித் தானே?"

ஆற்றில் கரைந்து போகும் என்று கண்ணன் நினைத்த மண் குதிரைகள் பத்தாயிரம் ரூபாய்ப் பணத்தில் கரைந்து போயிருந்தன. குச்சுக்காரி, தேவிடியா, ரோட்ஸைட் கிராக்கி என்றெல்லாம் நந்தினி வகையராக்களைத் திட்டிக் கொண்டிருந்த புலவரும், உண்மை விளம்பியும் இப்போது அவள் பெயரை உச்சரிப்பது கூட மரியாதைக் குறைவு என்று தயங்கி வாய்க்கு வாய் அவங்க போடுவதைக் கண்டு கண்ணனுக்குத் தாங்க முடியாத வியப்பு.

அவனுள் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் மீதமிருந்தது. நீண்ட நாட்களுக்கு முன் அம்மிணி அம்மாளையும் பாகவதரையும் பற்றித் தாறுமாறாகச் செய்தி பிரசுரித்து விட்டு ஏதோ ஒரு ஸ்டுடியோவில் போய் அவள் பெண்களைச் சந்தித்து அதைக் காட்டிப் பணம் கேட்டபோது உண்மை