பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா

11


போது வீடுகளுக்கிடையே முள்வேலியோ காம்பவுண்டுச் சுவரோ எடுத்துக்கொடுக்கவில்லை. எல்லைக் கல் மட்டும் நட்டு அப்படி அப்படியே விட்டிருந்தார்கள். உரியவர்கள் அவரவர்களுடைய வசதிக்கேற்ப காம்பவுண்டுச் சுவரோ முள் வேலியோ எடுத்துக் கொள்ளத் தடையில்லை.

கண்ணனுடைய இ ரு ப க் க த் து வீடுகளுக்கும் காம்பவுண்டுச் சுவர் கிடையாது. வலது பக்கம் முழங்கால் உயரம் வளரும்படிசவுக்கு வளர்த்துக் கத்திரித்து விட்டிருந்தார்கள். இடதுபுறம் எதுவுமே இல்லை.

ஒருநாள் மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது தன் மனைவி சுகன்யா சவுக்கு வேலி ஒரமாக நின்று பக்கத்து வீட்டு அம்மிணி அம்மாவோடு சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ணனே பார்த்துவிட்டான், அவனுள் எரிச்சல் மூண்டது.

அவன் வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றி உடுப்பு மாற்றி முகம் கழுவிக்கொண்டு வருகிறவன்ர கூட் அவன் மனைவி அம்மிணி அம்மாவிடம் பேசுவதை முறித்துக் கொண்டு உள்ளே திரும்பி வந்தபாடில்லை. மேலும் எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு.

"சுகன்யா! சுகன்யா!"- வீடே பிளக்கிற மாதிரிக் குரலில்கூப்பாடு போட்டு அவளை அழைத்தான் அவன்.

காப்பியும் கையுமாக,"எதுக்கு இப்படிக் கூப்பாடு?"-என்ற கேள்வியோடு வந்த சுகன்யாவைக் கோபமாக முறைத்தான் அவன்.

"எத்தனை நாளாக இப்படிப் பக்கத்து வீட்டோடு இழைந்தாகிறது?" .

"ஏன்? அதுக்கென்ன?"