பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

129



வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்ததால் கனத்த ஜமுக்காளத்தையும் மீறித் தரையின் ஜில்லிப்பு உறைத்தது. கட்டிலோ சிறியது. இருவர் படுக்க முடியாது. மின் விளக்கு இல்லை. மெழுகுவத்தி டார்ச்சை வைத்துச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஜூர வேகத்தில் கண்ணன் அயர்ந்து தூங்கிவிட்டான். சுகன்யா ஆழ்ந்த உறக்கமின்றித் தரையின் ஜிலுஜிலுப்பு உறைத்ததால் சும்மா புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அதிகால மூன்று மணி இருக்கலாம். திடீரென்று ஜமுக் காளமே தண்ணிரில் நனைந்தது போல் உணர்ந்து பதறியடித்துக் கொண்டு எழுந்து டார்ச் 8லட்டைப் போட்டால் தரையில் தண்ணிர் பரவிக் கொண்டிருந்தது. வீட்டுக் கூடம் சமையலறை எல்லாம் தண்ணி மயமா யிருந்தது. வெளியே பேய் மழை இன்னும் விட்டபாடில்லை. ஜன்னல் வழியாக டார்ச்சை அடித்துப் பார்த்தால் வெளியே தெருவில் தரையே தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் ஆறுபோல் நீர் ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னலில் ஏறிப் பின் பக்கம் ஒடிக் கொண்டிருந்த வழக்கமான கால்வாயைப் பார்த்தபோது அது காட்டாறு போல இரு கரையும் தெரியாமல் பொங்கிப் பெருகியிருந்தது. பின்புறம் வீட்டுக் கழிவு நீர் வெளியேறி அந்தக் கால்வாயில் கலப்பதற்காகச் செய்யப்பட்டிருந்த வழியாகக் கால்வாய்த் தண்ணிர் எதிர்த்துக் கொண்டு உள்ளே வந்து காம்பவுண்டில், வீட்டிற்குள் என்று தாராளமாக நுழைந்து கொண்டிருந்தது. தரையில் வைக்கப்பட்டிருந்த பிரம்புக் கூடை, பிளாஸ்டிக் வாளி முதலிய பண்டங்கள் ஒவ்வொன்றாக வீட்டுக்குள் ளேயே மிதக்க ஆரம்பித்திருந்தன.

அந்தக் காலனியில் வீடு அலாட் ஆகி அவர்களும் மற்றவர்களும் குடிவந்து பல ஆண்டுகள ஆகிவிட்டன. எந்த ஆண்டிலும் இப்படி நடந்ததில்லை. தெருவில் முழங்கால் அடி, ஓர் அடி தண்ணிர் தேங்கும், பின்புறம் கால்வாயில்