பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

முள்வேலிகள்



  • முடியாதுன்னா முடியாதுதான். நான் மானஸ்தன்.'

இப்படி விவாதம் நடந்து கொண்டிருந்த போதே அம்மிணி அம்மாளும், பாகவதரும் கூப்பாடு போட்டு அவளை அழைத்தபடி வாசல் தகவைத் தட்ட தொடங்கியிருந்தார்கள்.

அப்படிப் பார்த்தாலும் நீங்கதான் அவங்களுக்கு நெறையக் கெடுதல் பண்ணியிருக்கீங்களே ஒழிய, அவங்க உங்களுக்கு ஒரு கெடுதலும் பண்ணலியே? இந்த ஆபத் திலே விரோதம் பார்க்காமே அவங்க உங்களைத் தேடிவந்து கூப்பிடறாங்க. நீங்க இப்படி நேரங் காலம் தெரியாம முரண்டு பிடிச்சா எப்படி?’’

என்னை எதுவும் கேட்காதே! செத்தாலும் நான் அங்கே வரமாட்டேன்." - - ... -- - கட்டில் மூழ்கிவிட்டது. அதிக நீர்மட்டத்தில் அவள் குழந்தையின் சுமையும் சேர்ந்து நிற்க முடியாமல் தள்ளாடினாள்.

  • நீ போயிடு.....கோபமாகச் சொல்லலே. நிஜமாவே சொல்றேன்.'

- அவள் தண்ணிர்ச் சுழிப்பில் கீழே தடுமாறி விழுந்து விடாமல் குழந்தை கலாவோடு அடையாளமாக நடந்து போய் வாயிற் கதவுத் தாழ்ப்பாளேத் திறந்தாள்.

  • அவர் எங்கேம்மா? எல்லாருமா வாங்க. எங்க வீட்டு மாடிக்குப் போயிடலாம்.’’ இப்படிப் பாகவதரும் அம்மிணி யம்மாளும் ஒரே சமயத்தில் சுகன்யாவிடம் கேட்டதை உள்ளே ஏணியில் ஏறி நின்றபடி அவனும் கேட்க முடிந் தது. ஒரு சண்டையை அல்லது தர்மசங்கடத்தைத் தவிர்க்கக் கருதி, நாம முதல்லே போயிடலாம்! அவர் பரண் மேலே நனையாமல் சில சாமான்களே ஏத்திட்டு வரேன்னார்' என்று சுகன்யா வெளியே பொய் சொல்லிச் சமாளிப்பதை அவனும் ஏணிப் படியில் நின்று கேட்டுக் கொண்டுதான் இருந்தான். -