பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

138


உள்பக்கமாக உடனே டார்ச் அடித்துப் பார்த்த பாகவதர் கண்ணன் ஏணியில் நின்று கொண்டு பரணில் என்னவோ எடுத்து வைப்பதுபோல் தோன்றவே அதை நம்ப முடித்தது. குழந்தை கலாவைப் பாகவதர் வாங்கிக் கொள்ள, சுகன் யாவை அணைத்தபடி அம்மிணி அம்மாள் அழைத்துச் சென்றாள். நீரில் ஆட்கள் நகரும் சளகள ஓசையைக் கேட்டபடி கண்ணன் ஏணியில் நின்றான். இன்னும் சிறிது நேரத்தில் ஏணி கீழே தரையில் தரிக்காமல் மிதக்க ஆரம் பித்து விடுவோ என்றுகூடப் பயமாக இருந்தது.

அதை அவன் அவமானமாக எண்ணினான், அவர்களைப் பற்றி இத்தனை எழுதி இத்தனை பேசி இவ்வளவு கேவலமாக எல்லாம் செய்துவிட்டு இப்போது இந்த மழைக்கும் வெள்ளத் திற்கும் அவர்கள் வீட்டிலேயே அடைக்கலமாவதைப் போல் கேவலம் வேறில்லை என்று எண்ணினான். புலவரைப்போல் அந்த உண்மை விளம்பியைப்போல் பணத்துக்காகத் தானும் மானங்கெட்டுப் போய்விடக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தான் கண்ணன். முதல் நாள் மழையில் நனைந்ததால் சளியும் தும்மலுமாக ஏணியில் நிற்க முடியாதபடி அவன் உடல் நடுக்கி எடுத்தது. ஜூர உடம்பு தகித்தது. ஆலுைம் பிடிவாதம் தளரவில்லை. சிறிது நேரத்தில் பாகவதர் டார்ச் சுடன் வந்து அவனிடம் மன்றாடப் போவதையும் எதிர் பார்த்து அவரிடம் அதை எப்படிக் கடுமையாக மறுப்பது என்பதையும் இப்போதே யோசிக்க ஆரம்பித்திருந்தது அவன் மூளை.

பாக்வதர் மிக மிக இங்கிதமான ஆள். எப்படியும் அவனை மனம் மாற்றி வசியப்படுத்தி அம்மிணி அம்மாள் வீட்டு மாடிக்கு அழைத்துப் போகத்தான் பார்ப்பார். அவரை எதிர்த்து வாதிட்டுப் பிடிவாதம் பிடிப்பது கொஞ்சம் சிரம மான காரியம்தான் என்று நினைத்து உஷாராயிருந்தான் கண்ணன். பித்தக் கிறுகிறுப்புப் போல தலை சுற்ற ஆரம் பித்தது. பரணியிலேயே ஏறி உட்கார்ந்து விடலாமா என்று: