பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

முள்வேலிகள்



அவன் மேலே ஏற ஆரம்பித்ததும் ஏணி எதிர்பாராத வித மாக இடறியது. அவன் அப்படியே தண்ணிரில் மட்ட மல்லாக்க விழுந்தான். அதுவரைதான் அவனுக்கு நினைவு இருந்தது. அப்புறம் நடந்ததை எதையும் அவனறியான்.

19

மறுபடி கண்ணன் கண் விழித்தபோது விடிந்து வெகு நேரமாகியிருந்தது. தான் அம்மிணியம்மாள் வீட்டு மாடியில் கட்டிலில் படுத்திருப்பதை அவன் உணர்ந்தான். பக்கத்தில் மனைவி சுகன்யாவும் குழந்தை கலாவும் இருந்தார்கள். தன் முன் நெற்றியில் ஒரு கட்டுப் போட்டிருப்பதையும் கண்ணன் உணர்ந்தான். சுகன்யா பதறினாள்.

என்னங்க இது? நான் சொல்லியும் கேட்காம நீங்க பாட்டுக்கு ஏணியிலிருந்து விழுந்து தண்ணியிலே கிடந்தீங்க. ஏணி அடிபட்டு முன் நெத்தியிலே காயம் வேறே. நல்ல வேளையாப் பாகவதர் உங்களைத் தேடிக்கிட்டு அங்கே வந்திருக்கலேன்னா உங்கபாடு என்ன ஆகியிருக்கும்?"

இதைவிட மோசமாக எதுவும் ஆகியிருக்காது. இங்கே கொண்டாறத்துக்குப் பதிலா நான் செத்துத் தொலைஞ்சு என்னைக் கண்ணம்மாப் பேட்டையிலே கொண்டுபோய்ப் பொசுக்கியிருந்தால் கூட நல்லா இருந்திருக்கும்!"

-அவனுடைய வெறுப்பும் விரக்தியும் ஒரு சிறிதும் தணியவில்லை என்பது சுகன்யாவுக்குப் புரிந்தது. அவள் அவசர அவசரமாக அவன் மேலும் இப்படி உளறவிடாமல் வாயைப் பொத்தினாள். - - -

பாகவதரும் அம்மிணி அம்மாளும் உள்ளே வந்தார்கள். அவனைக் கனிவாக விசாரித்தார்கள். காலனியில் அந்தத் தெருவில் மாடி இல்லாத அத்தனை வீட்டுக்காரர்களும் தங்கள் தங்கள் வீட்டைப் போட்டது போட்டபடி வெள்ளத்தில் விட்டு