பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

135



விட்டு அந்த வீட்டு மாடியில் அடைக்கலம் புகுந்திருந்தார் கள். முகம் கோணாமல் அங்கே எல்லாருக்கும் உபசாரம் நடந்தது. பாகவதர். வீட்டார்கூட அங்கேதான் வந்து தங்கி யிருந்தார்கள். அன்று பால் சப்ளே இல்லை. காய்கறி, பல சரக்குக் கடைக்குப் போகப் பாதை யே கிடையாது. தெருவில் இடுப்பளவு வெள்ளம். வீட்டில் ஸ்டாக்கில் இருந்த கண்டென்ஸ்ட் மில்க் டப்பாக்கள், பால்பவுடரை வைத்து அத்தனை பேருக்கும் டீ, காப்பி, குழந்தைகளுக்குப் பால் என்று சமாளித்தார்கள் அம்மிணி அம்மாள் வீட்டார்.

காய்கறி இல்லாத குறை யை வீட்டில் ஸ்டாக் இருந்த பப்படம், மரச்சேனை அப்பளம், கூழ்வடாம், நேந்திரங்காய் வறுவல் ஆகியவற்றை வைத்துச் சமாளிக்க முடிந்தது. அமமிணி அம்மாளின் பெண்கள் தங்கள் நட்சத்திர அந்தஸ்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டுச் சர்வ சாதாரணமாக நர்ஸுகளைப் போல் அங்கே எல்லாருக்கும் ஒடியாடிச் சேவை செய்தது புதுமையாயிருந்தது.

அந்த நந்தினி வந்து கண்ணனுக்கு டெம்பரேச்சர் பார்த்து, 'இன்னும் கொஞ்சங்டட ஜூரம் இறங்கலே. ஜாக்கிரதையாப் பார்த்துக்கணும்' -என்று சுகன்யாவை அன்புடன் எச்சரித்து விட்டுப் போனாள். * .

கண்ணன் முள் மேலிருப்பதுபோல் அங்கே இருந்தாலும் வேறெங்கும் போக முடியாதபடி சுற்றி வெளளம் சூழ்ந் திருந்தது. யாருக்கும் தெரியாமல் எழுந்து ஓடிவிடுவது கூட முடியாத காரியம். அம்மணி அம்மாளின விசாலமான மாடி ஓர் அகதி முகாம் மாதிரி ஆகியிருந்தது. மின்சார சப்ளை அறவே கிடையாது. பால் சப்ளே நிறுத்தப்பட்டிருந் தது. ரொட்டி, காய்கறி, பல சரக்கு எதுவுமே கிடைக்க வில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வேறு பேசிக் கொண்டார்கள். மாடியில் நின்று தெருவைப் பார்த்தால் எது எதுவோ நீர்ப்பரப்பில் மிதந்து வந்தது. மரச் - சாமான்கள், செத்த நாய்கள், பிளாஸ்டிக் பண்டங்கள் என்று