பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மூள் வேலிகள்



வட்டாரத்திலிருந்து கண்ணனுக்காக மருந்துகள் வாங்கிவர ஏற்பாடு செய்தாள் நந்தினி. பார்லிக் கஞ்சியும் வேளை தவராமல் அவனது அறையைத் தேடிவந்தது.

கண்ணனுக்கு அந்த உபசரணைகளின் இடையே இருந்து அவற்றை அநுபவிப்பதற்குப் பதில் நாக் கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. யாரைப் பற்றித் தான் நாக்கில் நரம்பில்லாமல் பேசியும், எழுதியும், வதந்திகளைப் பரப்பியும் வந்தானோ அவள் கையாலேயே தன்னை உபசரிக்கும்படி இப்படி ஆகிவிட்டதே' என்று நினைக்கும் போதே உடம்பு கூனிக்கூசிக் குறுகியது.

ஆஸ்பத்திரி ஜெனரல் வார்டு போல் மாடிக் கூடத்திலும் வராந்தாவிலும் ஆட்கள் விழுந்து கிடந்த அந்தச் சூழ்நிலை யிலும் கண்ணனின் உடல் நிலை கருதித் தனது குளியலறை யிணைத்த படுக்கை அறையைத் தனியே விட்டுக் கொடுத் திருந்தாள் நந்தினி. அந்த அறையில் சுகன்யா, குழந்தை கலா, கண்ணன் ஆகிய மூவர் மட்டுமே தனியாகத் தங்கி யிருந்தனர். தாங்கள் மட்டும் அப்படித் தனிக் கவனிப்பையும் வசதியையும் அடைவது கண்ணனுக்கு என்ன வோ போலிருந்தது. அம்மிணி அம்மாளுடைய குடும்பத்தின் மிக உயர்ந்த குரு ஸ்தானத்திலிருந்த பாகவதரே தமது மனைவி மக்களுடனும் மற்றவர்களடனும் மாடிக் கூடத்தில் நடுவாக ஒரு பாயை விரித்து எல்லாருடனும் உட்கார்ந்திருக்கும்போது தான் மட்டும் இப்படித் தனியறையில் சொகுசாக அங்கே இருப்பது உறுத்தியது. ஏற்கவும் மனமில்லை, மறுத்து வெளி யேறவும் முடியவில்லை. மழை நிற்காததால் மேலும் நீர் மட்டம் உயர்ந்துவிட்டது. . . . . . . . . .

குழந்தைகள் கடைசி மாடிப்படியில் மேலே இருந்த படியே காகிதக் கப்பல் செய்து கீழே மிதக்க விடுகிற அளவு தண்ணிர் அதிகமாயிருந்தது. நீச்சல் தெரியாதவர்கள் மாடியிலிருந்து கீழே இறங்கவே வழியில்லாமல் .போயிற்று. இறங்கி நீந்தி எங்காவது ஓடிவிடலாம் என்றால் கூடக்