பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

முள்வேலிகள்,

 காலையில் பாகவதர் வந்து கண்ணனிடம் சொன்னார்: *நீர் நாலு பக்கமும் அணை வச்ச மாதிரி அவுட் லெட் இல்லாமச் சுவரெடுத்துப்பிட்டீர்! வந்த தண்ணி கொஞ்சம் கூட வெளியேறாமல் உம்ம காம்பவுண்டிலே மட்டும். அப்படியே நிக்கறதுக்குக் காரணம் இதுதான்! இப்ப யாராவது ஆள்விட்டு நாலு சுவர்லியும் கீழாகத் துவாரம் பண்ணி விட்டால்தான் உம்ம காம்பவுண்டிலேயிருந்து தேங்கின தண்ணி வெளியேறும். உம்ம கிட்டக் கேட்டு அனுமதி வாங்கிக்காம அதுக்கு நான் ஏற்பாடு பண்ண முடியாது." - .

"தாராளமாச் செய்யுங்கோ. எனக்கு ஒண்னும் ஆட்சேபணை இல்ல" என்றான் கண்ணன். ... .

பாகவதர் கடப்பாரையும் கம்பியுமாக நாலு கூலி ஆட்களை வரவழைத்துச் சுவர்களில் தண்ணிர் வெளியேற ஒட்டை போட முயலுகையில் எதிர்பாராத விதமாக ஈரத்தில் ஊறியிருந்த அந்தச் சுவர்களே. டமாலென்று சரிந்து விழுந்து விட்டன. மட்டமான சிமெண்டில் நல்ல ஆழமான அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டிருந்த அந்தச் சுவர்கள் விழுந்ததும் பாகவதர் பதறிப்போனார். கண்ணனிடம் ஓடி வந்து, தப்பா நெனக்காதீங்கோ மிஸ்டர் கண்ணன்! ஆட்கள். தொட்டதுமே சுவர் விழுந்தடுத்து. - நீங்க கோவிச்சுக்கறதா இருந்தால் அதைத் தொட்ட குத்தத்துக்காக என் செலவிலே நானே புதுச் சுவர் வேணா எடுத்துக் குடுத்துடறேன்.' . . . .


பரவாயில்லை! சுவர் விழுந்ததைப் பத்தி ஒரு வருத்த மும் பட வேண்டாம். நம்ம வீடுகளுக்கு நடுவில் இனிமேல் சுவர்களே வேண்டாம்னு நினைக்கிறேன்.'