பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

148


"நீங்க கஷ்டப்பட்டுப் பணம் கடன் வாங்கிக் கட்டின சுவர்களாச்சே?’’ -

என்ன செய்யறது? கஷ்டப்பட்டுத்தான் ஒவ்வொரு கெட்ட காரியத்தையும் கூடத் தெரியாமச் செய்துடருேம்."

பாகவதருக்கு அவன் மனநிலை புரிந்தது.

'இடித்து ஒட்டை பண்ணினாலொழியத் தண்ணி வெளியேற வழியில்லை. தேங்கி நாறப் போறதேன்னு இதைப் பண்ணச் சொன்னேன். அது இப்படி ஆயிப் போச்சு. பிள்ளையார் பிடிக்கக் குரங்காகப் போயிடுத்து' என்று மீண்டும் வருத்தப்படத் தொடங்கிய பாகவதரைக் கண்ணன் தன் நிதானமான, சாந்தமான பதிலால் மெல்ல ஆறுதலடையச் செய்தான்.

"இதிலே வருத்தப்படறதுக்கு ஒண்னுமே இல்லை. நானே ஒரு வீம்புக்காக அவசர அவசரமாகக் கட்டின சுவர். அது. இப்போ நினைச்சா எனக்கே பைத்தியக்காரத்தனமாப் படறது.' -

வெள்ளம் வடிஞ்சப்புறம் என் செலவிலேயே வேணும்ன ரெண்டரை அடி உயரத்துக்கு ஒரு சுவர் எடுத்து மேலே பாரர்ப்பட் வயர் கட்டித் தடுத்துக் குடுத்துடறேன். ரெண்டு பேருமே கவலையை விடுங்கோ' என்று சிரித்துக் கொண்டே அவர்களிடம் வந்து சொன்னாள் அம்மிணி அம்மாள். -

"இருக்கிற முள் வேலியையே அகற்றணும்னுபாகவதர் கதையிலே சொன்னார். நீங்க என்னடான்னா புதுசு புதுசா முள் வேலி போடணும்.கிறீங்களே? இது கண்ணன்.