பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சுலட்சணா காதலிக்கிறாள்



அதற்குச் சுண்ணாம்புக் காளவாய்' என்று கடுமையாகப் பெயர் சூட்டப் பட்டிருந்தது.

எதற்கும் விரைந்து மனத்தில் பட்டதை அப்படியே பிரதி பலிக்கும் வகையில் உடனே பெயர் வைத்து அழைத்து விடுவது என்பது மாணவப் பருவத்துக்கே உரிய உற்சாகங் களில் ஒன்று. பேராசிரியர்கள், கட்டிடங்கள், ஹாஸ்டல் உணவுப் பண்டங்கள், சக மாணவ மாணவியர் எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ காரண-இடுகுறிப் பெயர்களை சூட்டி அப்பெயர்களே வழக்க மாக்கியும், பிரபலப்படுத்தியும் மகிழ்வது அந்த வயதின் உற்சாகங்களிலே தலைசிறந்ததாயிருக்கும்.

உதயா பல்கலைக்கழக மாணவர்களும் அப்படி ஓர் உற்சாகத்தோடுதான் பெயர்கள் சூட்டியிருந்தார்கள். அந்தப் பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டுமில்லாமல் சம்பந்தப் பட்டவற்றைப் பற்றிய உண்மை அபிப்ராயங்களாகவும் விமர்சனங்களாகவும் சில சமயங்களில் கண்டனங்களாகவும் கூட இருந்தன. எப்படியாயினும் அந்தப் பெயர்களில் அவற்றை வைத்தவர்களின் இரசனை புலப்படும்.

சுலட்சணாவும், கனகராஜும் பொருளாதார மாணவர்கள் சனி, ஞாயிறு விடுமுறைகளில் மாணர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பொருளாதாரப் பேராசிரியர் சில புத்தகங்களின் பெயர்களை மாணவர்களுக்குச் சொல்லுவார். - போஸ்ட் கிராஜுவேடஸ் லைப்ரரியில் போய் அவற்றை எடுத்துப் படிக்கவேண்டும்.

திங்கட்கிழமை வகுப்பில் மறுபடி பேராசிரியர் பரீட்சை யைப் போல இல்லாமல் பொதுவாக அந்தப் புத்தகங்களை எல்லாம் மாணவர்கள் தேடிப் படித்தார்களா இல்லையா எனபது பற்றி விசாரித்தறிவார். படித்தவர்களை உற்சாக மூட்டும் வகையில் இண்டேர்னல் அசெஸ்மெண்ட் மார்க்கு