பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சுலட்சணா காதலிக்கிறாள்


சமயத்துக்கு வந்தோம்னாலும் கலப்ரரிக்குள்ளே நான் நுழைஞ்சு ரெண்டுமணி நேரத்துக்கு மேலே ஆச்சு. நீங்க ஜஸ்ட் இப்பத்தான் உள்ளே நுழைஞ்சீங்க...'

உடனே லைப்ரேரியன் அவனைக் குறுக்கு விசாரணை செய்தார்:

நீங்க ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே லைப்ரரியிலே நுழைஞ்சதுக்கு என்ன அத்தாட்சி?"

லைப்ரரி ரிஜிஸ்டர்லே கையெழுத்துப் போட்டிருக்கேன் சார்.’’

லைப்ரேரியன் உடனே எழுந்திருந்து போய் அங்கே உள்ளே நுழைகிற முகப்பில் வைக்கப்பட்டிருந்த ரஜிஸ்தரை நோட்டம் விட்டுவிட்டு அவன் சொல்லியதை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார். -

"மிஸ் சுலட்சணா! தயவு செய்து நீங்க என்னை மன்னிக் கனும்: மிஸ்டர் கனகராஜ் கையெழுத்துப் போட்டிருக்கும் சீரியல் நம்பர் நாற்பத்திரெண்டு. நீங்க கையெழுத்துப் போட்டிருககிற சீரியல் நம்பர் அறுபத்தி ஏழு ரிஜிஸ்டர்படி அவர்தான் முன்னாடி லைப்ரரிக்குள் வந்திருக்கார்னு உறுதிப் படுது. '

அதுக்காக...?"

  • இந்த புக்கை கிளெய்ம் பண்றதிலே மிஸ்டர் கனகராஜுக்கு ப்ரயாரிட்டி இருக்கு." சுலட்சணா தான் அவனுக்காக விட்டுக்கொடும்படி ஆயிற்று. விட்டுக் கொடுத் தாள். அவனுக்குத்தான் வெற்றி. - . . . ." .

புத்தகத்தை அவன் எடுத்துக் கொண்டு போனான். அவள் வெறுங்கையோடு திரும்பினாள். போகிற போக்கில், ஐயாம் வெரி சாரி சுலட்சணா!-என்று அவளிடம் நுனி நாக்கால் வருத்தம் தெரிவித்து விட்டுப் போனான் கனகராஜ்.