பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சுலட்சணா காதலிக்கிறாள்


பெற்ற மாணவ மாணவிகளைத்தான் போஸ்ட் கிராஜுவேட் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள்.

மாணவர்களின் அதிகபட்ச அளவு இருபது என்றிருந்தாலும் பதினெட்டுக்குமேல் சேர்ப்பதே இல்லை. பிரமாதமான புகழ் பெற்ற பேராசிரியர்கள் பொருளாதாரத்துறையில் பணிபுரிந்தார்கள். முதல் வகுப்பு, ரேங்க்-யூனிவர்ஸிடி அவுட்ஸ்டாண்டிங்-இவற்றை அடைய மாணவர்களிடையே.

மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பெரிய பெரிய குடும்பங்களில் இருந்து மாணவர்கள் வந்து தங்கிப் படித்தார்கள். கனகராஜ் சேலததில் யாரோ ஒரு பெரிய தொழிலதிபரின் ஒரே மகன் என்று மட்டும் சுலட்சணா கேள்விப்பட்டிருந்தாள். கனகராஜ் பல்கலைக் கழக நேரம் தவிர முக்கால்வாசி நூல் நிலயத்திலேயே பொழுதைக் கழித்ததால் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்கிற ஞானமும் எல்லா இண்டேர்னல் அஸெஸ்மெண்ட்டிலும் முதல் மதிப்பெண் பெறுகிற திறமையும் அவனுக்கு இருந்தது.

'இந்தக் காலத்தில் பெண்கள்தான் கெட்டிக்காரத் தனமாகப் படிக்கிருர்கள்'-என்ற பொதுமதிப்பீட்டையும் மீறி ஆண்பிள்ளேயாகிய கனகராஜ் எகிலும் நம்பர் ஒன்றாக முன் நின்றான் சுலட்சணாவுக்குக்கூட இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் அவன் அவளுக்கு ஒரு சவாலாகவே வாய்த்திருந்தான். பல்கலைக்கழக ரேங்க்ட் - அல்லது டிஸ்டிங்க்ஷன் அவனுக்கே போய்விடுமோ என்று கூட அவள் இரகசியமாகக் கவலையும் பொருமையும் கொன்டிருந்தாள்.

இந்த மாதிரி அத்தியாவசியமான புத்தகங்கள் நாலந்து பிரதிகளாவது வாங்கி லேப்ரரியில் அடுக்கி இசுருக்