பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

சுலட்சணா காதலிக்கிறாள்

பிரச்னைகள் மழையையும் காற்றையும் போலத்தான். அவை சிலரை நீக்கிவிட்டுப் பெய்வதோ, விலக்கிவிட்டு வீசுவதோ நிச்சயமாக இயலாத காரியம். எவ்வளவோ திறமாகவும், தரமாகவும் சாமர்த்தியமாகவும் நிர்வகிக்கப்பட்டு வந்த உதயா பல்கலைக்கழகமும் அந்தத் தலைமுறையின் பிரச்னைகளான காற்று மழைகளுக்குத் தப்ப முடியவில்லை.

வெளிப் பிரச்னைகளான காற்றும் மழையும் தவிர மாணவிகள் படித்து வந்ததனால் காதல் பிரச்னைகளாலும் சிறு சிறு தகராறுகள் அவ்வப்போது மூண்டன. மாணவர்கள் சம்பந்தப்பட்ட விடுதிகள் இருந்த பகுதிக்கும் மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிகள் இருந்த பகுதிக்கும் நடுவே இரண்டு கிலோ மீட்டர் தொலைவு காம்பஸ்-க்குள்ளேயே இருந்தது. மாணவிகள் விடுதிகள் இருந்த பகுதியைச் சுற்றித் தற்செய லாக அகழி போல் ஒரு பெரிய வாய்க்கால் - அதன்பின் பெரிய காம்பவுண்டு மதிற் சுவர்-இரண்டரைக் கிலோ மீட்டர் தொலைவு, இத்தனையும் இருந்தும் காதல்களும் அவை பற்றிய போட்டிகள் பூசல்களும் இருக்கவே செய்தன. அவை தொடர்பான பிரச்னைகளும் எழுந்தன.

இத்தனைக்கும் பெண்கள் விடுதிகள். சம்பந்தப்பட்ட வார்டன், வாட்ச்மேன், உணவுவிடுதியில் சமைப்பவர், பரிமாறுபவர் உட்பட அனைவரும் பெண்களாகவே நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் என்ன? வகுப்புக்களில், நூல் நிலையங்களில், லேபரெட்டரி முதலிய ஆராய்ச்சிச் சாலைகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பழகத்தானே வேண்டியிருந்தது?

ஆண்களும், பெண்களும் நெருங்கிப் பழகி அதனால் வம்புகள் வருவதை நான்கு இடங்களில் தடுத்தார்கள் என்றால் நாற்பது இடங்களில் அப்படிப் பழகுவது தவிர்க்கப் படமுடியாமல் இருந்தது. அங்கெல்லாம் காதல்கள், ஆசைகள், ஒருதலைக் காதல்கள், இருவர் பிரியத்தை எதிர்க்கும் மூன்றாமவரது அசூயை எல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாமல் போயிற்று. மாணவர்களும் மாணவிகளும்