பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

சுலட்சணா காதலிக்கிறாள்

“விதிவிலக்காகச் சிலர் இருக்கலாம். ஆனால் வெளி விவகாரங்களிலும் மாணவர் போராட்டங்களிலும் ஈடுபடுகிற பலர் படிப்பைத் தட்டிக் கழிக்கவே அவற்றில் ஈடுபடுகின்றனர். இல்லையானால் பரீட்சை நேரங்கள் பார்த்து ஏன் போராட்டங்கள் தொடங்கப்படுகின்றன? பரீட்சைகளே ஒத்திப்போடும் முயற்சியில் தானே அப்படிச் செய்கிறார்கள்?” என்று வாதிடுவான் கனகராஜ்.

சுலட்சணா அதை ஒப்புக்கொள்ள மாட்டாள். சில மாணவர்கள் கனகராஜ் சொல்கிற மாதிரியும் இருக்கிறார்கள் என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும் கனகராஜின் பத்தாம் பசலிக் கொள்கையை மறுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் அவள் உறுதியாக வாதிடுவாள்.

“நீ ஒரு போராட்டக்காரரின் மகன்! அதனால் இப்படித் தான் பேசுவாய்! உன்னைத் திருத்தக் கடவுளாலும் ஆகாது”- என்றுதான் கனகராஜ் அப்படி நேரங்களில் அந்த விவாதத்தை முடிப்பான்.

3

ந்த ஆண்டின் தொடக்கத்தில் உதயா பல்கலைக் கழக லேடிஸ் ஹாஸ்டலில் ஒரு பிரச்னை ஏற்பட்டது.

விடுதி அறைகளிலிருந்த பாத்ரூம்களுக்குத் தண்ணீர் சப்ளை சரியாக இல்லை. வழக்கமாக ஜூன் கடைசியிலோ ஜூலை தொடகத்திலோ பெய்யும் கோடை மழைகள் தவறி விட்டதனால் லேடீஸ் ஹாஸ்டல் ஓவர்ஹெட் டேங்குக்குத் தண்ணிர் மேலேறவில்லை. ஹாஸ்டலின் பின்புறமுள்ள இரு கிணறுகளுக்கு வந்துதான் எல்லாப் பெண்களும் நீர் இறைத்துக் குளிக்க வேண்டியிருந்தது. முன்புறம் மதிற் சுவர் இருந்தது போல் பின்புறம் மதிற் சுவர் இல்லாதத்ளுல் மைதானத்தில் விளையாடும் மாணவர்கள், காலையில் வாக்