பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா

158


போகும் பேராசிரியர்கள் இவர்கள் காணும்படி திறந்த வெளியில் கிணற்றடில் மாணவிகள் குளிக்க நேர்ந்தது.

ஒருநாள் இரண்டு நாள் இந்த ஏற்பாடு என்றால் எப்படியோ சமாளித்து விடலாம். ஆனல் பலநாள் இதே நிலை நீடித்தது. மோட்டார் மூலம் ஓவர்ஹெட் டேங்குக்குத் தண்ணீர் இறைக்கும் கிணறுகளை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தினால் பிரச்னையைச் சமாளித்துவிட முடியும். ஆயினும் அதைச் செய்யாமல் பல்கலைக் கழக நிர்வாகம் காலதாமதப்படுத்தியது. வி. சி., வார்டன், ரிஜிஸ்திரார் எல்லாரையும் போய்ப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனார்கள் மாணவிகள். காரியம் ஒன்றும் நடக்கவில்லை.

சுலட்சணா உடனே விடுதி மாணவிகளை ஒன்று திரட்டினாள். ‘ஆர்கனைஸ்’ செய்வதில் எப்போதுமே அவள் கெட்டிக்காரி.

“நமது உரிமையை நாம் அடைய ஒவ்வொருவராகப் பார்த்துக் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருப்பானேன்? ஒரு போராட்டத்தைத் தொடங்கினால் தான் நம் கஷ்டத்தை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும்.”

சில மாணவிகள் ஒப்புக்கொண்டார்கள். வேறு சிலர் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கினார்கள். கால வரையறையற்ற உண்ணாவிரதத்துக்குத் தலைமை ஏற்று நடத்த முன்வந்தாள் சுலட்சணா.

அந்தப் பல்கலைக்கழக வி. சி. அயல் நாட்டுப் பிரயாண வெறியர். மெக்ஸிகோ, ஜப்பான்,ஜெர்மனி என்று சதா பறந்து கொண்டேயிருப்பார்.

ஆக்டிங் வி. சி. வம்பில் சிக்காமல் பதில் சொல்லி மழுப்புவதையே ஒரு கலையாகப் பயின்றவர். அப்போதும் துணைவேந்தர் பொறுப்பில் தற்காலிகமாக இருந்த ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் ஆடல் வல்லான் பிள்ளை