பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

சுலட்சணா காதலிக்கிறாள்

ஒரு முடிவும் எடுக்கமுடியாமல் திணறினார். இவருக்குக் (கையா).டல் வல்லான் பிள்ளை என்று ‘டல் பிள்ளை’ என்றும் வித விதமான பெயர்கள் ஏற்பட்டிருந்தன.

இவருடைய வ குப்புகள் பெரும்பாலும் ‘டல்’ அடிப்பதால் மாணவர்களிடம் டல் பிள்ளை - ன்று தந்தி விலாசம் போல் ஒரு பிரபலகிமாமாயிருந்தது. டல் பிள்ளை தன் பெயக்கேற் லேடிஸ் ஹாஸ்டல் தண்ணிர்ப் பஞ்சத்தைப் பற்றி கண்டுக்கொள்ளாமல் டல் லாக விட்டுவிட்டார். வேறு வழியின்றி மறு படி ஜி. ஸ் திரார், யூனிவர்சிடி அட்மினி ஸ்டிரேடிவ் ஆபீஸர் ஆகியோரை போய்ப் பார்த்தால், 'கொஞ்சம் பொறுத்து அட்ஜஸ் பண்ணிக்குங்க. வி. சி. திரும்பி வந்துறட்டும் என்றார்கள்.

வி. சி. வந்து மட்டும் என்ன சார் பண்ணிடப்போறாரு? ஒரு வாரம் இங்க தங்கிட்டு மறு படி ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் வி சி. ஸ் கான்ஃபரன் ஸ்னு எதுக்காவது புறப்பட்டுப் போயிடப் போறாரு' என்றாள் சுலட்சணா அதற்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

பல்கலைக் கழக நிர்வாக அலுவலகத்தின் முகப்பில் செக்கச் செவலன் பூத்துச் சொரிந்திருந்த குல்மோகர் மரத்தடியில் சுலட்சணா தகலமையில் உண்ணா விரதம் ஆரம்பமாயிற்று. உண்ணா விரதம் இருந்த மாணவிகளின் முன்பு ஏராளமான விளம்பர அட்டைகளில் கோரிக்கை வாசகங்கள் பல எழுதி வைக்கப்பட்டிருந்தன.

'தண்ணீர் இல்லாமல் மாணவிகளைக் கண்ணீர் சிந்த வைக்காதே!'

'பல்கலைக் கழகம் இந்தியாவில்-வி. சி. வெளி நாட்டிலே.’

'தண்ணீருக்குத் தவிக்கிறோம்! தட்டிக் கேட்க ஆளில்லை.’வெ