பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

169

அவன் உணர்வுகளைப் பாதிக்கத் தொடங்கினாள். அவனிடமிருந்து அவள் விலகிச் செல்லச் செல்ல அவன் அவளருகே நெருங்கிச் செல்ல ஆசைப்பட்டான்.

அவளால் அவனைத் தவிர்க்கவும் முடியவில்லை. விரும்பவும் முடியவில்லை. மாற்றலாம் என்று முயல ஆரம்பித்தாள். அவன் மாறுவது கடினமென்று தோன்றியது. புதிதாகச் சிந்திப்பதற்குப் பயப்பட்டான் என்பதைவிடப் புதிதாகச் சிந்திப்பவர்களேயே பார்க்கக்கூடப் பயப்பட்டான் கனகராஜ். புதுமையே அவனுக்குப் பெரிய அலர்ஜியாக இருந்தது.

அவள் மாக்ஸிம் கார்க்கியின் அன்னை, ஆண்டன் செகாவின் சிறுகதைகள் என்று தனக்குப் பிடித்த புத்தகங்களை அவனிடம் சொன்னால் அவன் ‘ஹெரால்ட் ராபின்ஸ்’ மட்டுமே தனக்குப் பிடிக்கும் என்றான்.

பல்கலைக்கழக விவாத மன்றத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் ஏற்றது ‘கலப்புப் பொருளாதாரமே!’ என்ற தலைப்பில் அவன் விவாதித்தான். பொதுவுடைமையே என்று அவள் விவாதித்த வேகத்தைக் கண்டு அவன் பயந்தே போனான்.

அவளுக்கு நல்ல விவாதத் திறமையும் ஆணித்தரமாக அடித்துப் பேசும் ஆற்றலும் இருந்தன. அவனிடம் துண்டு துண்டாகச் சில உதிரிக் கருத்துக்கள் மட்டும் இருந்தன. அவற்றை இணைத்துத் தொகுத்து வடிவம் தந்து கோவையாகப் பேசத் தெரியாமல் விழித்தான் அவன். பரீட்சைகளில் மட்டும் பிரமாதமாக எழுதி முதல் மார்க் வாங்கினான் அவன். பொது வாழ்விலும் மற்ற மாணவர்களிடமும் முதல் மதிப்பும் மதிப்பெண்களும் அவளுக்குத்தான் அதிகம்.

ஒரு சிறிய பிரசங்கம் அல்லது அறிக்கை அந்தப் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று சேர்த்தத் தன் முன்னால் நிறுத்திவிடும் ஆற்றல் அவளுக்கு இருந்தது. அவனே