பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

சுலட்சணா காதலிக்கிறாள்


நிமிர்ந்த நடையோடு டீனின் அறையிலிருந்து வெளியேறினாள் சுலட்சணா. திட்டமிட்டபடி விடுமுறையில் சுலட்சணாவும் அவளோடு ஒத்துழைத்த மாணவ மாணவிகளும் கிராமத்துக்குச் சாலை போட்டு முடித்தார்கள். பொதுவாக இம்மாதிரி சோஷல் செர்வீஸ் நாட்களில் ஆகும் உணவு, சிற்றுண்டிச் செலவுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம்தான் ஏற்கவேண்டும். முன்பே கட்டணங்களில் இதற்கான தொகை மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டிருந்தும் காம்பஸூக்குள்ளேயே களைபிடுங்கச் சொல்லியும் புதர் வெட்டச் சொல்லியும் வேலையை முடித்து விடுவதால் வழக்கமான ஹாஸ்டல் சாப்பாடு சிற்றுண்டியிலேயே இதையும் சமாளித்து விட முடிந்தது. வேறு எக்ஸ்ட்ரா செலவு இல்லை.

சாலை போடச் சுலட்சணா செய்த ஏற்பாட்டில் பல்கலைக் கழகத்திலிருந்து பணம் எதுவும் கோரிப் பெறாமல் அவரவர்கள் செலவை அவரவர்களே பார்த்துக் கொண்டார்கள்.

அவர்களது பணி நடந்த பகுதி மக்களும் வலிய முன் வந்து அவர்களுக்கு உதவினார்கள். எல்லாரிடமிருந்தும் மாணவ மாணவிகளுக்கு நல்ல ஒத்துழைப்புக் கிடைத்தது. படிக்கிற பையன்களும், பெண்களும் வெயிலில் மண்வெட்டியும் கூடைகளுமாகச் சாலை போடுவதை மக்கள் வியப்பாகப் பார்த்தார்கள்.

விடுமுறை நிமித்தம் ஊருக்குப் போகுமுன் கனகராஜ் சுலட்சணாவை வந்து பார்த்தான். சமூக சேவைத் திட்டத்திற்கு மாணவர்கண் அழைக்கும் துண்டுப் பிரசுரங்கள் அச்சாகி வந்திருந்தன. சுலட்சணாவிடமிருந்து அதில் ஒரு துண்டுப்பிரசுரத்தைத் தானே கேட்டு வாங்கிப் படித்துப் பார்தத கனகராஜ் அலட்சியமாகவும் ஏளனமாகவும் நகைத்தான். பின்பு சொன்னான்:-

“இந்தக் கழுதை பொதி சுமக்கிற வெயிலில் நம்மாலே அலைய முடியாது. சுகமாக ஒரு மாசம் ஏர்க்காட்டிலே