பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

181

“திறந்த வெளியில் சட்டையில்லாத உடம்புடன் மண் வெட்டி பிடித்து வேர்க்க விறுவிறுக்கச் சாலை போடுகிற திறமையோ பழக்கமோ எனக்கு இல்லை. ஆனாலும் உனக்கு எப்படியும் உதவ வேண்டும் என்பதற்காகவே என் பாக்கெட் மணியாக அப்பா எனக்குத் தருவதில் மிச்சம் பிடித்து உன்னிடம் கொடுத்தேன்.”

“எனக்கு வேண்டியது உங்கள் வேர்வையும் உழைப்புமே ஒழியப் பணம் இல்லை. வேர்வையையும் உழைப்பையும் ஏழைகளுக்காக விட்டுக்கொடுக்கிற மனம் உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று அறிய விரும்பினேன். அந்த மனம் உங்களுக்கு இல்லை. பிச்சைக்காரனுடைய திருவோட்டில் கையில் வந்த காசுகளை அவசர அவசரமாக அள்ளிப் போடுகிற பணக்காரன் போல் நீங்களும் என்னிடம் பணத்தை எடுத்து நீட்டினீர்கள். எனக்கு அது பிடிக்கவில்லை, வேண்டாமென்றேன். என் நிலையில் நான் செய்ததுதான் சரி.”

அந்தச் சாலை போடும் திட்டம் மாணவ மாணவிகளின் ஒத்துழைப்போடு வெற்றிகரமாக முடிந்தபிறகும் கனகராஜ் பணம் கொடுக்க முன்வந்த இந்தச் சம்பவத்தையும், பல்கலைக்கழக டீன் தன்னைக்கூப்பிட்டு மிரட்டிய அந்தச் சம்பவத்தையும் பலமுறை திரும்பத் திரும்ப இவ்வாறு நினைத்துப் பார்த்திருக்கிறாள் சுலட்சணா. எதிர்ப்புக்களும் பயமுறுத்தல்களும் அவளை வளரச் செய்தனவே ஒழிய ஒரு சிறிதும் தளரச் செய்யவில்லை. தயங்கச் செய்யவில்லை.

அந்தப் பல்கலைக்கழக வட்டாரத்தில் ஆண் அழகனைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி நடத்தினால் சுலபமாகக் கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவான் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல அழகியைத் தேர்த்தெடுக்க விரும்பினால் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சுலட்சணா வெற்றிபெறுவாள் என்பது சர்வநிச்சயம். இப்படிப்பட்ட இருவருமே எகனாமிக்ஸ் துறையில் ஒரே வகுப்பில் சேர்ந்து

மு-12