பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

சுலட்சணா காதலிக்கிறாள்

படிப்பது அந்த டிபார்ட்மெண்ட்மேல் மற்றவர்களைப் பொறாமை கொள்ளச் செய்தது. ஒரே வகுப்பில் சேர்ந்து படித்ததோடு போகாமல் அவர்கள் ஒன்றாகப் பழகவும் செய்தார்கள். ஒன்றாகத் தென்பட்டார்கள். ஒன்றாகப் பொது இடங்களில் சிரித்துப் பேசி மகிழ்ந்தார்கள். சந்தித்தார்கள். பிறர் கண்களில் பட்டார்கள்.

இதனால் பரவலாக அந்தப் பல்கலைக்கழக எல்லையில் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று ஓர் அநுமானம் தானாகவே ஏற்பட்டுப் பரவியிருந்தது. இந்தச் செய்தியைச் சம்பந்தப்பட்ட இருவருமே முன்வந்து ஆட்சேபிக்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. கனகராஜ் இதை வரவேற்றான். நம்பினான். இதற்காக உள்ளுர அவன் மனம் குறு குறுத்தது. மகிழ்ந்தது. அவளோடு முன்னைவிட இன்னும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகினான். அவளை அவனால் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. நடுவில் ஏதோ நெருடியது. சிரிக்கச் சிரிக்க அவனோடு பேசினாள். விவாதித்தாள். தனியாக உணவு விடுதிகளுக்கு அழைத்தால் மறுக்காமல் வந்தாள். ஆனால் அவனிலிருந்து தீர்மானமாக நிச்சயமாக வேறுபட்டாள். சாப்பிடும் பண்டங்களிலிருந்து சர்ச்சை செய்யும் விஷயங்கள் வரை அவள் தனித்து நின்றாள்.

அவன் “இரண்டு மசால் தோசை”—என்று ஆர்டர் கொடுத்தால் உடனே குறுக்கிட்டு “எனக்கு வெறும் டீ மட்டும்தான்”—என்பாள். ‘தோசை வேண்டாம், டீ போதும்’—என்று அவன் ஆட்சேபணையைப் பொருட்படுத்தாமல் வெயிட்டரிடமே நேரில் கண்டிப்பாகச் சொல்லிவிடுவாள்.

படத்துக்கு வர ஒப்புக்கொண்டு தியேட்டர் வாசல்வரை கூடப் போவாள். அங்கே போய்ப் பார்த்ததும், ‘மூளையை மழுங்க அடிக்கிற இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் நான்