பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

188

வரமாட்டேன். ஆக்ரோஷ், அர்த்தசத்யா, தாகம், முகா முகம், தர்ட்டிசிக்ஸ் செளரங்கி லேன் மாதிரி எதாவது படங்கள் வந்தால் சொல்லுங்கள். சேர்ந்து போவோம்’ என்று திரும்பிக் கிளம்பிவிடுவாள். அவனும் வேறு வழியின்றி நிறையப்பணம் செலவழித்து ரிசர்வ் செய்திருந்த டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்துவிட்டு அவளைப் பின் தொடர்வான்.

“ஷீ இஸ் அன்ப்ரடிக்டபிள்” என்று அவன் உள்ளே கறுவிக் கொள்வான். அவளோ அவனளவிற்கு அதில் உணர்ச்சிப் பாதிப்பு இல்லாமல், “எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நீங்கள் ஏன் டிக்கெட்டைக் கிழித்துப் போட்டு விட்டுத்திரும்பு கிறீர்கள்? உங்களுக்குப் பிடித்தால் நீங்கள் போய் உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு வரவேண்டியது தானே?”—என்று சர்வ சகஜமாக அவனைக் கேட்பாள்.

தன்னை அவள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா அல்லது அவளைத்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்று விளங்கிக்கொள்ள முடியாமல் அப்போதெல்லாம் திணறுவான் அவன். அவள் தன்மேல் இரக்கப்பட்டுப் பழகுகிறாளா, பிரியப்பட்டுப் பழகுகிறாளா என்ற சந்தேகம் அவனுள் அடிக்கடி மூண்டு மனத்தைத் திக்குமுக்காடச் செய்யும்.

ஒரு வாலிப வயதுப் பெண்ணிடமிருந்து இரக்கத்தையோ பரிவையோ அவன் எதிர்பார்க்கவில்லை. பிரியத்தையும் காதலையுமே எதிர்பார்த்துத் தவித்தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை.

6

ரு முறை சுலட்சணாவும் கனகராஜூம் யூனிவர்ஸிடி காம்பஸுக்கு அருகே உள்ள ஒரு கடைத் தெருவில் மாலை வேளையில் தற்செயலாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. கவனத்தைக் கவரும் சம்பவம் அது.