பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பா.

185

உலாத்திக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரன் அதைக் கண்டு கொள்ளாததுபோல் இருந்தான். சுலட்சணா அவனிடம் ஓடிப்போய்ப் புகார் செய்தாள்.

“உங்களுக்கு ஏம்மா இதெல்லாம்? அவங்க இந்த நிமிஷம் அடிச்சிப்பாங்க, அடுத்த நிமிஷமே சிரிச்சுப் பேசு வாங்க...நாம தலையிடறது சரியா இருக்காது”—என்று வேதாந்தம் பேசினான் கான்ஸ்டபிள்.

நடந்து கொண்டிருந்த சண்டையைப் பார்த்தால் அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த ரவுடியின் இடுப்பில் இளநீர் சீவுகிற அரிவாள் போல் கூர்மை மின்னும் அரிவாள் வேறு இருந்தது. கனகராஜ் உதவிக்கு வருவான் என்று நம்பிப் பயனில்லை என்கிற முடிவுக்கு வந்த சுலட்சணா அந்த ரவுடியை நோக்கி, “அடிக்கிறதை நிறுத்துப்பா... என்ன தகராறு உங்களுக்குள்ளே...?”-என்ற கேள்வியுடன் விரைந்தபோது, “சுலட்சணா! வேண்டாம் போகாதே சொன்னாக் கேளு!”-என்று அவளைத் தடுத்து அலறினான் கனகராஜ். அவள் அவனைப் பொருட்படுத்தவில்லை. ‘சிவிக் கரேஜ்’ இல்லாத ஆண்பிள்ளையும் ஓர் ஆண் பிள்ளையோடு சேர்த்தியா என்று அவனைத் துச்சமாக நினைத்தாள் சுலட்சணா.

அவசர அவசரமாகப் பக்கத்துக் கடையிலிருந்த இளைஞன் ஒருவன் ஓடி வந்து சுலட்சணாவை வழிமறித்து, “இதுலே நீங்க ஏம்மா தலையிட்டு வம்பை விலைக்கு வாங்கறீங்க? இங்கே பிளாட்பாரத்துல் கடை பரத்தற வங்க எல்லாம் அந்த ஆளுக்கு ‘மாமூல்’ குடுத்துடறது உண்டு. இந்தப் பொண்ணு புதுசு. இதுக்கு நடைமுறை தெரியாது. தெற்கே ராமநாதபுரத்துப் பக்கத்திலேருந்து புதுசாப் பிழைக்க வந்திருக்கு. “பிளாட்பாரத்திலேகடைபோட நீ யாருப்பா அதிகாரி?”ன்னு அவனை அது எதிர்த்துக் கேட்டதாலேதான் தகராறு”—என்றான்.

சுலட்சணா பதிலுக்கு அவனை வினவினாள்:- “அந்தப் பெண் கேட்டதிலே என்ன தப்பு? அவ பிளாட்பாரத்திலே