பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

சுலட்சணா காதலிக்கிறாள்

கடை போட இவனுக்கு ஏன் பணம் அழணும்? இவன் யாரு? அதுக்குத் தானா வதியா என்ன?”

“அது மாமூல்! இல்லாட்டி அவன் கலாட்டாப் பண்ணுவான். தகராறு வரும்.”

“போலீஸ்ல கம்ப்ளயிண்ட் பண்ணலாமே?”

“போலீஸ் இதெல்லாம் ஒண்ணும் கண்டுக்காது. ஏன்னா இந்த வசூல்லே அவங்களுக்கும் பங்கு உண்டு”

அந்தப் பெண்ணின் கண்ணீரையும் அழுகையையும் காணாமலும் கதறலைக் கேளாமலும் அப்போது அந்த பஜாரில் வருவதும் போவதுமாயிருந்த அத்தனை மனிதர்களும் கபோதிகளா, கை கால் இழந்த முடங்களா என்று அவர்கள் மேல் வெறுப்பும் கோபமும் அடைந்தாள் சுலட்சணா. அவள் குறுக்கே பாய்ந்து அந்தச் சண்டையைத் தடுக்க முயன்ற போது அந்த மீசைக்கார முரடனின் கோபம் முழுவதும் சுலட்சணாவின் மீது திரும்பியது. “வாம்மா ஜான்ஸி ராணி! இவளுக்குப் பலிஞ்சுக்கிட்டு வர்ரியா நீ?”-என்று சுலட்சணாவின் பக்கம் திரும்பினான் அவன்.

பல்கலைக்கழக விவசாயப் பிரிவு மாணவர்கள் சிலர் அந்த வேளையில் தற்செயலாக அந்த பஜார்ப்பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் சுலட்சணாவை நன்கு அடையாளம் தெரியுமாகையால் அவளுக்கு உதவியாக வந்தார்கள். அந்த முரடனைத் தட்டிக் கேட்டார்கள். சுலட்சணாவின் பக்கம் அணிவகுத்து நின்றார்கள். ஆனால் கனகராஜ் பக்கத்திலேயே வரவில்லை. பயத்தோடு தூர விலகி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தானே ஒழியப் பக்கத்திலேயே நெருங்கவில்லை அவன். அரிவாளுக்கும், அரிவாள் மீசைக்காரனுக்கும், அத்தனை பயம் அவனுக்கு. விவசாய மாணவர்கள் நால்வரும் அப்படிப் பயப்படவில்லை.

முரடன் முதலில் தாக்கிக் கொண்டிருந்த பெண்ணையும், சுலட்சணாவையும் விட்டுவிட்டுப் பரிந்து கொண்டு வந்த விவ-