பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

சுலட்சணா காதலிக்கிறாள்

களிலும் சர்ச்சைகளிலும் சண்டைகளிலும் வீணாகப் பல்கலைக்கழக மாணவர்கள் தலையிட்டுப் பல்கலைக்கழகத்திற்குள் டென்ஷனையும், விவகாரங்களையும், பதில் விளைவுகளையும் கொண்டு வராமல் இருக்க வேண்டும்’ என்பதாகத் துணை வேந்தர் ஒரு சுற்றறிக்கையை அவசர அவசரமாக அனுப்பினார். நல்ல வேளையாக அவர் அயல்நாடு எதுவும் போகாமல் அப்போது ஊரிலேயே இருந்தார். டீனும் துணைவேந்தரும் சுலட்சணாவைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். கண்டிப்பது போன்ற குரலில் அவளிடம் பேசினார் துணை வேந்தர்.

“இந்தக் காம்பஸிலே உன்னாலே எப்பவும் வம்புதான் அம்மா! பஜார்லே நடக்கிற தெருச் சண்டையை எல்லாம் யூனிவர்ஸிடி காம்பஸுக்குள்ளே கொண்டு வந்து விட்டு எங்கள் உயிரை ஏன் வாங்குகிறாய்? ஒழுங்காய் லட்சணமாய்ப் படிப்பைக் கவனியேன்”

“உங்க யூனிவர்ஸிடி மாணவன் ஒருத்தன் தெருவிலே நடந்த ஒரு அக்கிரமத்தைத் தட்டிக்கேட்ட உடனேயே ரவுடி அவன் கையை வெட்டியெறியறது எப்படி சார் தெருச் சண்டையாகும்? அதைப் பொறுத்துக்கொண்டு நாங்க எப்படிச் சும்மா இருக்க முடியும் சார்?”

“தகராறு யூனிவர்ஸிடி சம்பந்தமானதா இல்லையாங்கிறதுதான் இப்போ என்னுடைய கேள்வி?”

“பாதிக்கப்பட்டவர்கள் உங்களுடைய யூனிவர்ஸிடி மாணவர்கள் என்பதுதான் என் பதில்.”

“வேலை கெட்டுப்போயி நீங்க இழுத்துக்கிட்டு வர்ர தெருச் சண்டையைப் பத்தி எல்லாம் இங்கே தேடி வர்ர போலீஸ்காரங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிட்டிருக்க முடியாது”.

“கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமப் பேசாதீங்க சார் ஒரு ஸ்டூடண்ட் வலது கையை முறிச்சுக்கிட்டு