பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

191


ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாரு. பேட்டை ரவுடிங்க கிட்டச் சிக்கி அவஸ்தைப்பட்ட ஒரு பெண்ணையும், என்னையும் துணிந்து காப்பாற்ற முன்வந்ததுக்காக அந்த ஸ்டேண்டுக்குக் கிடைச்ச பரிசு அது!"

“தலையிட வேண்டாததுலே எல்லாம் அநாவசியமாத் தலையிடறதாலே வர்ர வம்புதான் இதெல்லாம்"-

“நீங்களோ, டினோ ஒரு கர்டிஸிக்காகக்கூட இன்னும் ஆஸ்பிடலுக்கு விஸிட் பண்ணலே. அந்தக் கையிழந்த ஸ்டூடண்ட்டைப் பார்த்து ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லலே. மாணவர்கள் எல்லாம் நொந்து கொதிச்சுப் போயிருக்காங்க"-

“இதென்ன எங்களுக்கு மிரட்டலா?"

“நீங்க எப்பிடி வேணும்னாலும் எடுத்துக்கலாம். பூனை கண்ணை மூடினாலே உலகம் இருண்டு போய்விடாது சார்!"

7

ப்படித் துணைவேந்தரைத் தைரியமாக எச்சரித்து விட்டு அவருடைய அறையிலிருந்து வெளியேறித் தன் விடுதிக்குத் திரும்பினாள். அவள் திரும்பியபோது மாணவர்களின் விடுதி மெஸ் பையன் ஒருவன் ஒரு கடிதத்தோடு அவளுக்காக முகப்பிலேயே காத்திருந்தான். கனகராஜ் தான் கடிதத்தை எழுதியிருந்தான். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு செக் ஆயிரம் ரூபாய்க்கு எழுதி இணைக்கப்பட்டிருந்தது.

“சுலட்சணு! என்னை மன்னித்துவிடு. சிறு வயதிலிருந்தே அரிவாள், முரடர்கள், இரத்தம் என்றால் பயந்து நடுங்குகிற சுபாவம் எனக்கு. கலகம் என்றால் காதூரம் ஓடிவிடுவேன். அன்று, பஜாரில் உன்னோடு இறுதிவரை