பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

முள்வேலிகள்


சரி! நான் ஒண்னும் தடுக்கலே...அவங்க 'மெம்பர்ஷிப்'பை அப்ரூவ் பண்ணிக்க்லாம்" -என்று அவனே கடைசியில் வழிக்கு வரும்படி ஆகிவிட்டது.

உள்ளூரக் கடுப்போடும் ஆத்திரத்தோடும்தான் கண்ணன் இதைச் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் தான் சொன்னதை நிரூபித்துக் காட்டி அம்மிணி அம்மாவைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டதற்காக முழுச் செயற்குழுவுமே வெட்கித் தலை குனிய நேரிடும்படி செய்ய ஒரு சந்தர்ப்பம் பின்னால் எப்போதாவது வாய்க்கத்தான் வாய்க்கும் என்று அவன் உறுதியாக நம்பினான்.

3

காரணமில்லாமல் ஒரு பெரிய வெறுப்பு உருவாக ஆரம்பித்து விட்டால் அதன்பின் சகஜமாக நடக்கும் ஒவ்வொரு சாதாரண நிகழ்ச்சியும்கூட அந்த வெறுப்பை வளர்க்கவே பயன்படும் என்பது அம்மிணி அம்மா விஷயத்தில் மெய்யாகிக் கொண்டு வந்தது.

ஒரு நிலைமைக்குமேல் இந்த வெறுப்புப் பொறாமையாக மாறியது. பெரும்பாலும் அந்தக் காலனியிலிருந்தவர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அதிகப் பொருளாதார வசதி இல்லாதவர்கள்.வீட்டுவசதி வாரியம் ஒதுக்கிக் கொடுத்த வீட்டுக்கு மறுபடி வெள்ளையடித்துத் துப்புரவாக வைத்துக் கொள்ளக் கூட வழியில்லாதவர்கள்.

ஆனால் அம்மிணி அம்மாவோ அங்கு குடியேறிய ஒராண்டுக்குள்ளேயே வீட்டுக்கு மாடி, எடுத்துவிட்டாள். அந்த வரிசையிலே மாடியோடு கூடிய எடுப்பான ஒரே வீடாக அம்மிணி, அம்மாவினுடையதுதான் விளங்கியது.