பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

சுலட்சணா காதலிக்கிறாள்


நாம் ஏன் வெளியே போகவேண்டும் என்கிறாய்? இங்கேயே உட்கார்ந்து பேசலாம் வா" - என்று வற்புறுத்தி அவனைப் பல்கலைக்கழகப் பூங்காவுக்கு அழைத்து வந்து விட்டான்.

அங்கே பூங்காவுக்குள் நுழைந்த பிறகும் கனகராஜ் யாருக்கோ கூசி ஒதுங்கி ஒளிகிறாற்போல் ‘அந்த மூலையில் உட்காரலாம். இந்த மூலதான் மறைவாக இருக்கும்’ - என்று ஒதுங்கலான இடங்களாகத் தேடியது சுகவனத்துக்கு வியப்பை அளித்தது.

‘சரி! அவன் போக்கிலேயே விட்டுப் பிடித்து விஷயத்தை வரவழைக்கலாம்'- என்று ஒரு சவுக்குப் பச்சை வேலியை ஒட்டினாற்போல மறைவில் உட்கார்ந்திருந்தார்கள்.

அந்த வேலியின் மறுபுறமும் யாரோ இருவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது சுகவனத்துக்குத் தெரிந்தது. யாரென்று தலையை நீட்டி எட்டிப் பார்ப்பது அநாகரிமாக இருக்கும் என்று விட்டு விட்டான். பித்துப் பிடித்ததுபோல் விரக்தியாகத் தென்பட்ட கனகராஜிடம் சுகவனம்தான் முதலில் பேச்சைத் தொடங்கினான்!

“ஏண்டா என்னமோ மாதிரி ஆயிட்டே? உடம்பு சரியில்லாம இருந்தியா? ஒருவாரத்துக்கு முன்னாடி பார்க்கறப்பக் கூட நல்லா இருந்தியே?"

“என்னமோ டல்லடிக்குது மெடிகல் லிவு அப்ளே பண்ணி எழுதிக் குடுத்திட்டுப் பேசாம ஊருக்குப் போயிடலாமான்னு பார்க்கிறேன்."

“படிப்பு என்ன ஆறது? உங்கப்பா கனவு கண்டுக் கிட்டிருக்கிற யூனிவர்சிடி ஃபர்ஸ்ட் ரேங்க் என்ன ஆகிறது?"

“இப்போஒண்ணுலியுமே இண்ட்டரஸ்ட் இல்லேப்பா..."

“ஏன், என்ன ஆச்சு? வாட் இஸ் ராங் வித் யூ கனக ராஜ்?"