பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203

சுலட்சணாா காதலிக்கிறாள்.

 " இல்லைடா சுகவனம்! அது ரொம்பக் கஷ்டமான காரியம். அவ ஒரு சீரியஸ் டைப். இலட்சியம், பொதுத் தொண்டு, சமூகசேவை என்று தேடித் தேடி ரிஸ்க் எடுத்துக் கொண்டு அலைகிற ஒருத்தியால் எப்படி இன்னொருத்தரைக் காதலிக்க முடியும்? காதலிக்கப் போதுமான மென்மயான உள்ளமே அவளுக்கு இல்லைங்கிறது என் அபிப்ராயம்...'

  • எதிலிருந்து நீ இந்த முடிவுக்கு வந்தாய்? என்ன நடந்தது உங்களுக்குள்?" - - -

அவள் கோபமாகப் பூசிக்கொள்ள மஞ்சளும் புனைந்து கொள்ள வளையல்களும் அனுப்பித் தன்னை அவமானப் படுத்தி விட்டதை இன்னொருத்தரிடம் வெளியிடவே கனகராஜுக்குப் பிடிக்கவில்லை. கூச்சமாகவும் வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. -

வைர மோதிர விஷயத்தை மட்டும் சுகவனத்திடம் விவரித்தான். அந்த மோதித்தை உடல் ஊனமுற்றேர் நல்வாழ்வு நிகிக்காக ஏலம் விட்டுப் பணம் வசூலித்துக் கொடுத்ததையும் சொன்னான். சோஷல் செர்வீஸ் முகாமுக்கும் வீராசாமி சிகிச்சை நிதிக்கும் தான் பணம் நன்கொடை கொடுத்து அவள் அவற்றை மறுத்துத் திருப்பிக் கொடுத்துவிட்டதையும் சொன்னான்.

இவற்றைக் கேட்டுவிட்டு யோசிப்பது போல் மெளனமாக அமர்ந்திருந்தான் சுகவனம். பின்பு அவனிடம் மெல்லச் சொல்லத் தொடங்கினான்-

‘’இவ வேற மெட்ட’ல்லே உருவாயிருக்கிறவ. புகழ்ச்சி. அழகு, பணம், இதுல எல்லாம் சொக்கிப் போய் மயங்கிக் காதலிக்கிற டைப் இல்லை இவ. துணிச்சல், தைரியம், பிறருக்காக உதவ விரைகிற குணம், சமூக உணர்ச்சி, சிவிக் கரேஜ், மைனுட் சிவிக் ஸென்ஸ், டயன மிஸம், சிவிக் ஹானஸ்டி. ஹ்யூமனிஸம், ப்ராக்மேடிஸம், சோஷல் கமிட்மெண்ட், சோஷல் மைண்டெட்னெஸ், சோஷல்