பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

208


கான்ஷியஸ்னெஸ் இதெல்லாம் உள்ள ஒருத்தன்தான் இவளுக்குப் பெரிதாகத் தோன்றுவான். அப்படிப்பட்ட ஒரத்தனத்தான் இவளால் விரும்ப முடியும். நீயோ ஒரு நிச்சயமான ஃபண்டமெண்டலிஸ்ட்! இவள் உன்னை விரும்ப முடியாது'- -

‘'நீ சொல்றதெல்லாம். சைக்காலஜி.'

"ஆமாம்! ஆனல் சுலட்சணாவைப் பொறுத்து இதுதான் நீ தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. நடைமுறையிலிருந்துதான் சைக்காலஜி பிறந்தது. இப்போ நான் சைக்காலஜியிலிருந்து நடைமுறைக்கு வந்து அதைச் சுலட்சணாவோடு ஒப்பிட்டு உன்க்கு ரிசல்ட் சொல்லுகிறேன்! அவ்வளவுதான்."

‘'எது எப்படியோ? ஓர் ஆட்சேபணையும் சொல்லாமல் அவள் என்னோடு மிகவும் நெருங்கிப் பழகினாள் என்பது மட்டும் உண்மை'- -->

'இது நவீன யுகம்! நம்மிடம் கலகலப்பாகப் பழகுகிற பெண்கள் எல்லாம் நம்மைக் காதலிப்பதாக நாம் நினைப்பது தான் பேதைமை. அது நீடித்த உண்மையில்லை. தற்காலிக மான பிரமைதான்'- . -

உடனே இதற்குக் கனகராஜ் பதில் எதுவும் சொல்லவில்லை. மெளனமாகத் தலைகுனிந்து புல் தரையைப் பார்த்த படி உட்கார்ந்திருந்தான். ஏறக்குறைய நண்பன் தனக்கு வந்திருக்கும் நோயைச் சரியாக டயகனைஸ் செய்து விட்டான் என்பது அவனுக்கே ஒரளவு புரியத்தான் செய்தது. ஆனாலும் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் விருப்பமில்லை, கனகராஜின் தளர்ச்சியும், விரக்தியும் சுகவனத்துக்குப்புரிந்தன. அவன் கனகராஜூக்கு ஆறுதல் கூறித் தேற்றினான். -

டேக் இட் ஈஸி: மை பாய்! இவ இல்லாட்டா இன்னொருத்தி'- .