பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

சுலட்சணா காதலிக்கிறாள்



“அப்பிடி விட்டுட முடியலேப்பா ! இத்தினி நாள் நெருங்கிப் பழகிட்டு இப்பத்திடீர்னு மோசம் பண்ணிட்டா...”'

'“நான் அப்பிடி நினைக்கலே. இத்தனை நாள் உன்னோட கணிப்புத் தான் தவறாணது. இத்தனை நாளும் அவ உன்னைக் காதலிக்கிறதாக நீயே நினைக்கலேன்னு நீ சொன்னாலும் அப்பிடி உள்ளுற நினைச் சுக்கிட்டுத்தான் அவஸ்தைப் பட்டிருக்கிறே!' - ” இப்படி நண்பன் சொல்வது உண்மையாக இருந்தாலும் அவன் தன்னிடம் மிகவும் நிர்த்தாட்சண்யமாகப் பேசுவது போல் தோன்றியது கனகராஜுக்கு. நெடுநேரம் பேசியும் விவாதித்தும் சுகவனத்தினால் கனகராஜை முழுமையாக ஆறுதலடையச் செய்ய முடியவில்லை. அவன் விரக்தி யாகவே இருந்தான்.

நெடுநேரத்திற்குப்பின் கனகராஜூம் அவனும் புறப்படலாம் என எழுந்திருந்தபோது தற்செயலாகச் சவுக்கு வேலியின் மறுபுறம் அமர்ந்திருந்தவர்களும் கூட எழுந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இவர்கள் இருவருக்கும் ஒரே அதிர்ச்சி.

அது வீராசாமியும், சுலட்சணாவும்தான். சுலட்சணாவும் இவர்களைப் பார்த்து விட்டாள். "ஹலோ என்று கூடச் சொன்னாள், ஆனால் கனகராஜுக்குத்தான் அவளிடம் பேச வாய் வரவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீளாமலே இருந்து விட்டான். விவசாயப் பட்டப்படிப்புப் படிக்கும் அழகில்லாத. கறுப்பு நிறமுள்ள இந்தப் பையனிடம் சுலட்சணாவுக்கு அப்படி என்னதான் கவர்ச்சி இருக்க முடியும் என்று குமுறிப் புழுங்கியது கனராஜின் உள்ளம்.

“வலதுகை விரல்கள் போய்க் கையே தெரியாமல் முழுக்கைச் சட்டை மட்டும் தொங்குகிற இந்தக் கருவாயன் மேல் அப்படி என்னதான் கவர்ச்சியோ இவளுக்கு?'”