பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

சுலட்சணா காதலிக்கிறாள்.



9

வனுக்கு என்னப்பா குறை? மன்மதன் மாதிரி இருக்கான், படிப்பிலேயும் ஃபர்ஸ்ட் ரேங்க். இவனை விட்டு விட்டு யாரோ ஒரு கை நொண்டியாப்போன பயலுக்குப் பின்னாடி அந்தக் கழுதை சுத்தறான்னா அதுக்குப் போய்இவன் ஏன் உருகனும்? அவ குடுத்து வைக்கலே. அவ்வளவு தான்'-என்று சுகவனத்திடம் கூப்பாடு போட்டார் டீன். ” இதில் சுகவனம் அவரோடு இசையவில்லை. வெளிப் படையாகக் கருத்து வேறுபட்டான்.

“நீங்க எல்லோருமே தப்புக் கணக்குப் போடறீங்க சார் ஒரு பெண்ணை ஆண் கவர்ந்து அவள் மனதில் இடம் பிடிக்கப் படிப்பு, முகவசீகரம், பணம் இதெல்லாமே மட்டும் போதாது சார். பொது இடத்திலே பொது விஷயத்திலே பலர் கொண்டாடும் வீரத்தை அவன் காட்டினால்தான் அவனால் அவள் அதிகம் கவரப்படுகிறாள். -

பேரழகனான இராமனே சீதையின் மனதில் இடம் பிடிக்கப் பலர் மெச்சும்படி ஒரு கனமான வில்லை எல்லார் முன்னிலையிலும் எடுத்து ஒடிக்கவேண்டியிருந்தது. முரட்டுக் காளை ஒன்றைப் பலர் முன்னிலையில் தனியாக ஒர் ஆண் மடக்கிப் பிடிக்கும் ஏறுதழுவுதல் போன்ற திருமண நிபந்தனைகள் கூடப் பழைய நாளில் இப்படித்தான் ஏற்பட்டிருக்க வேண்டும் சார் தன்னுடைய சிவிக் கரேஜி'னால் தான் ஓர் ஆண் ஒரு பெண்ணின் மனத்தில் இடம் பிடிக்கிறான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த முதுகுளத்தூர்ப்பையன் அப்படி ஒரு சிவிக் கரேஜ்' மூலம்தான் சுலட்சணாவைக் கவர்ந்திருக்கிறான். காதலில் அந்தக் கவர்ச்சியைக் சாதாரணமானது என்று நீங்கள் சொல்லிவிடி முடியாது சார்!