பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா. . 809

இன்றைய சமூக வாழ்வின் அடிப்படைத் தேவையான சமுதாயத் துணிச்சல்' என்கிற ஸிவிக் கரேஜ் இல்லாதவனே ஆண்கள், பெண்கள் யாருமே இலட்சியம் செய்வதில்லை என்று கனகராஜின் நிலையை வைத்துப் புரிந்துகொண்டான் சுகவனம். . -

டீன் டெலிஃபோனில் பேசி ஒருவாறு நிலைமையைப் புரிய வைத்தபின் கனகராஜின் தந்தை, 'அப்படியானால் நீங்கள் அவனைத் தனியே அனுப்ப வேண்டாம். நானே இங்கிருந்து டிரைவரைக் காரோடு அனுப்பிவைக்கிறேன். லிவு கொடுத்துப் பக்குவமாக எடுத்துச் சொல்லிச் சமாதானப் படுத்தி இங்கு அனுப்பி வைத்து விடுங்கள்'-என்று ஃபோனிலேயே பதில் சொன்னார். -

கேவலம் ஒரு பெண் விஷயம் தன் மகனை இத்தனை துாரம் பாதித்துவிட்டது என்பதை இரண்டாவது தடவை நினைக்கக்கூடக் கஷ்டமாயிருந்தது அவருக்கு அதற்காகக் கவலையும் வருத்தமும் அடைந்தார். அந்தப் பணக்காரத் தந்தை.

10

தற்கிடையில் கனகராஜின் தந்தையிடம் பேசி அவனைச் சேலத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபின் டீன் தம்முடைய அதிகார வரம்பையும் மீறி இன்னொரு காரியம். செய்தார். இப்போது அவருக்கு மேலிருந்த துணை வேந்தரின் பதவிக் காலம் அடுத்த இரண்டாண்டுகளில் முடிகிறது. இரண்டு டேர்ம் தொடர்ந்து இருந்து விட்டதால் இனி அவருக்கு அந்தப்பதவி மேலும் கிடைக்க முடியாது.

உதயா பல்கலைக்கழகத்தின் புரோசான்ஸ்லருக்கு மிகவும் வேண்டியவர் கனகராஜியின் தந்தை. கனகராஜ்