பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

சுலட்சணா காதலிக்கிறாள்

“இருக்கலாம்! ஸ்டுண்ட்ஸோட நியாயமான உரிமைகள் என்னென்னவோ, அதை அடைய என்ன மார்க்கமிருக்கோ அத்தனை மார்க்கத்திலும் போராடத்தான் போராடுவோம்! அதைத் தடுக்க ஒரே வழி எங்கள் குறைகளை நீங்களாக முன்வந்து நிவர்த்தி பண்ணுவதுதான் சார்.'”

“என்னமோ இந்த யூனிவர்ஸிடி அமைதியா நடக்கிறது உனக்குப் பிடிக்கலே போலிருக்கு."”

“புயலுக்கு முந்திய புழுக்கமே அமைதியாகிவிடாது. இது அமைதியில்லை. புழுக்கம்.”

“நீயும், அக்ரியில் படிக்கும் யாரோ ஒரு நொண்டிப் பையனும் சேர்ந்துதான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறீர்களாம்”

“சார்! மன்னிக்கணும். உங்க மாணவர்களைப்பற்றி நீங்க இன்னும் கொஞ்சம் நாகரிகமாகப் பேசலாம்னு நினைக்கிறேன். ஐ. நா. வின் சர்வதேச உடல் ஊனமுற்றோா் ஆண்டு--உடல் ஊனமுற்றோரும் மனிதர்களே! அவர்களை மனிதர்களாய்- மரியாதையாய் நடத்துங்கள்' - என்ற சுவரொட்டி இங்கு நம் வி. சி. அறையின் முகப்பில் இன்னும் ஒட்டப்பட்டிருக்கிறது. அதை இங்கே யாருக்காக சார் ஒட்டியிருக்கிறீர்கள்? மாணவர்களுக்காக மட்டும்தானா? ஆசிரியர்களுக்கு அந்த மரியாதை அநாவசியமா? அந்தக் கல்ச்சர்' வேண்டாமா?’’ -”

சாரி...அந்த 'அக்ரி பையன் மேல் உனக்கு இத்தனை இண்ட்ரெஸ்ட் இருக்கும்னு எனக்குத் தெரியாமப் போச்சே "

“'யாரோ வெறும் பையன் இல்லை சார் அவருக்குன்னு ஒரு பெயர் இருக்கு. வீராசாமி அவரைத் தொடர்ந்து படிக்க அநுமதிக்கும்படி தாங்கள் போராடி வெற்றி பெற்றது உங்களுக்கும் யூனிவர்ஸிடி நிர்வாகத்துக்கும் அதுக்குள்ள மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்.' -”