பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

சுலட்சணா காதலிக்கிறாள்



“உங்களுக்கு அந்தச் சிரமம் எல்லாம் வேண்டாம் சார்: சற்றுமுன் அவரையும் அவர் நண்பர் சுகவனம் என்கிற மெடிக்கல் ஸ்டூடண்டையும் நானே பல்கலைக்கழகப் பூங்காவில் கூடப் பார்த்தேன். நான் ஹலோ சொல்லியும் கனகராஜ் என்கூடப் பேசவில்லை. கூச்சப்பட்டுக்கொண்டு ஒதுங்கிப் போய்விட்டார். என்னுடன் அக்ரி மாணவர் வீராசாமி இருந்ததுதான் காரணம் சார். மேலும் இதெல்லாம் எங்கள் சொந்த விவகாரம். ஒரு டீன் தலையிட்டு இதில் ஆகப் போவது எதுவுமில்லை சார்!”

“ஏமாற்றத்தில் கனகராஜூக்கு வாழ்க்கையே வெறுத்து விடுமோ என்று நான் பயப்படுகிறேன் அம்மா! அவன் ரொம்ப விரக்தியாயிருக்கிறான். ஒரு மாறுதலுக்காக நாளைக்கு சேலம் போகிறான். நீ விரும்பினால் தடுத்து நிறுத்தலாம்.”

'வேண்டாம்! தடுக்காதீர்கள். நான் அதை விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...'

“இந்த ஏமாற்றம் கனகராஜின் படிப்பு, எதிர்காலம், வாழ்வு எல்லாவற்றையுமே பாதிக்கப் போகிறது. அவனது குடும்பத்தில் அக்கறையுள்ளவன் என்ற முறையில்தான் நான் உன்னைக் கூப்பிட்டுப் பேசுகிறேன்.”

மன்னியுங்கள் சார் கூச்சமும் பயமும் உள்ள ஒரு கோழைக்காக என்னிடம் மறுபரிசீலனை எதுவும் இல்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதை நானே நாளைக் காலையில் மிஸ்டர் கனகராஜுக்கு ஒரு கடிதமாக எழுதியும் அனுப்பிவிடுகிறேன். அதில் நீங்கள் என்னைக் கூப்பிட்டுப் பேசியதைப்பற்றிச் சொல்ல மாட்டேன். அதேபோல் நீங்கள் ஒருவேளை அவரைக் கூப்பிட்டுப் பேசினாலும் என்னோடு பேசியது பற்றி அவரிடம் எதுவும் கூற வேண்டியதில்லை. மிஸ்டர் கனகராஜுக்காக நான் இரக்கப்படுகிறேன். இரக்கப்படுவது மட்டும் அவருக்குப்