பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சுலட்சணா காதலிக்கிறாள்.


வனின் குணங்களைப் பற்றிய அக்கறையோடும் பிரக்ஞையுடனுமே இனி அவளால் காதலிக்க முடியும். உங்களிடம் அந்தக் குணங்கள் இல்லை. அறவே இல்லை.

நண்பரே! சுலட்சணா இன்னும் காதலிக்கிறாள். ஆண்மையை, சமூகப்ரக்ஞையை, எதிர் நீச்சலிட முடிகிற வீரத்தை, அவளால் இன்னும் காதலிக்க முடியும் இவைகளைக் குணமாகக் கொண்ட ஒரு வீரனே, அவன் அழகனாக. இல்லாவிட்டாலும் அவளால் காதலிக்க முடியும். அவனுக்குக் கையோ காலோ இல்லாவிட்டாலும் கூட அவள் அவனைக் காதலிக்க முடியும். கையும், காலும் மூக்கும் முழியுமாக இருந்து ஆண்மையில்லாதவனுயிருந்தால் அவனை அவளால் சாதாரணமாக நேசிக்கக்கூட முடியாது.

காதலிக்கப் போதுமான மென்மையான உள்ளமே எனக்கு இல்லை'-என்று நீங்கள் உங்களது நண்பரிடம் குறைப்பட்டுக்கொண்டிருந்ததை நானே என் செவிகளால் கேட்டேன். ஆம்! உண்மைதான்!

கோழையைக் கண்டு சகித்துக்கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. தீமையைக் கண்டு சகித்துக்கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. கோழையை பயந்தாங் கொள்ளியை-அடிதடிக்குப் பயந்து தன் கூட வந்த பெண் பிள்ளையைத் தனியே விட்டுவிட்டு ஓடுகிற அற்பத்தனத்தைச் சகித்துக்கொள்கிற மென்மை என்னிடம் இல்லை. நிச்சயமாக இல்லை. இனிமேலும் அப்படி மென்மை என்னிடம் ஏற்படவே ஏற்படாது என்பதும் சர்வ நிச்சயம்.

என்னிடம் காதலிருக்கிறது. அதை சிவிக் கரேஜ்'. உள்ள ஒருவருக்கு- அதாவது உங்களது நண்பரே உங்களிடம் கூறினது போல் சிவிக் ஹானஸ்டி உள்ள ஒருத்கருக்கே சமர்ப்பிக்க நான் விரும்புகிறேன். விரும்புவேன்.

அன்று பஜாரில் நீங்கள் என்னத் தனியே விட்டுவிட்டு ஒடி ஒளிந்த போது அதிர்ஷ்டவசமாக வேறொருவர் எனக்குக்